வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சமாதிக்கு போனா சந்தி சிரிக்க வச்சுருவாங்களே.! ஜகா வாங்கும் சிவகார்த்திகேயன்.. வசமாக சிக்கிய அயலான்

Sivakarthikeyan: அவன் அவன் கஷ்டம் அவன் அவனுக்கு என கவுண்டமணி ஒரு நகைச்சுவை காட்சியில் நக்கலாக சொல்லி இருப்பார். அது நடிகர் சிவகார்த்திகேயனுக்கு இந்த சூழ்நிலையில் சரியாக பொருந்தும் படி இருக்கிறது. தமிழ் சினிமா உலகின் கறை படியாத நாயகர்களின் லிஸ்டில் இருந்த சிவகார்த்திகேயன் மீது கடந்த சில மாதங்களாகவே விரும்பத்தகாத புகார்கள் எழுந்து வந்தது.

சிவகார்த்திகேயன் எப்போது சிக்குவார் இருக்கிற சந்தேகங்களை எல்லாம் கேட்டுவிடலாம் என மீடியாக்கள் ஒரு பக்கம் வலை விரித்து காத்திருக்கிறார்கள். அதே நேரத்தில் சிக்குனா மொத்தமா சின்னாபின்னமாக ஆக்கி விடுவார்கள் என்ற பயத்தில் சிவகார்த்திகேயன் அவருடைய படத்தின் இசை வெளியீட்டு விழாவை கூட அமைதி அடக்கமாக ஒரு நட்சத்திர ஹோட்டலில் வைத்து முடித்துக் கொண்டார்.

இதுபோன்ற ஒரு சூழ்நிலையில்தான் கடந்த 28ஆம் தேதி கேப்டன் விஜயகாந்த் மறைந்து விட்டார். அவருடைய இறுதி அஞ்சலிக்கு நடிகர்கள் அத்தனை பேரும் ஆஜராகிவிட்டார்கள். வெளிநாடுகளில் ஷூட்டிங் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் இருந்த நடிகர்களும் தொடர்ந்து இந்தியா திரும்பி, கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் கேப்டனின் சமாதிக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

Also Read:கூட நிக்க முடியாமல் திணறும் ரெண்டு படம்.. தனுஷை மிஞ்சி சிவகார்த்திகேயன் போடும் ஆட்டம்

கார்த்தி, சூர்யா, ஜெயம் ரவி போன்றவர்கள் கேப்டனின் சமாதிக்கு வந்து முட்டி முட்டி அழுது கொள்வது சோசியல் மீடியாக்களில் பயங்கர வைரல் ஆகி வருகிறது. பொதுவாக இது போன்ற செண்டிமெண்ட் சீன்களுக்கு பேர் போனவர் நடிகர் சிவகார்த்திகேயன். அவர் கண்ணீர் விட்டு கதறாத மேடைகளே இல்லை என்று சொல்லலாம். கையில் மைக் கிடைத்தால் செண்டிமெண்டாக பேசி கதறுவதில் வில்லாதி வில்லன் இவர்.

ஜகா வாங்கும் சிவகார்த்திகேயன்

ஆனால் சிவகார்த்திகேயன் இன்றுவரை கேப்டன் சமாதிக்கு வரவில்லை. இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது மீடியா தான். சமாதிக்கு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறார் என்று கூட பார்க்காமல் அங்கேயும் இமான் பஞ்சாயத்தை கிளறிவிட்டு விடுவார்களோ என்ற பயத்தில் தான் தமிழ் சினிமாவின் கறை படியாத நாயகன், குடும்பங்கள் போற்றும் ஹீரோ சிவகார்த்திகேயன் எஸ்கேப் ஆகி இருக்கிறார்.

சிவகார்த்திகேயன் இப்போது அயலான் பட ப்ரமோஷனில் படு பிஸியாக இருக்கிறார். ஒரே அடியாக அயலான் ரிலீஸ் மற்றும் பொங்கல் விழாவை எல்லாம் சிறப்பித்து விட்டு பொறுமையாக வந்து கேப்டனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி கொள்ளலாம் என்ற பிளானில் இருக்கிறார் போல.

Also Read:அயலான் படத்திற்கு சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளம்.. அதிக லாபத்திற்கு போட்ட ஸ்கெட்ச்

Trending News