சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் படத்தைப் பார்த்த பிரபல இயக்குனர் அவரது நடிப்பு திறனைப் பாராட்டியுள்ளார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அக்டோபர் 30ல் வெளியான படம் அமரன்.
இதில் சாய்பல்லவி ஹீரோயினாக நடித்திருந்தார்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமாகத் தயாரித்தது. இதற்கான உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அதிகளவில் புரமோசனும் செய்தனர்.
இப்படம் 300 கோடிக்கு மேல் வசூலித்து, சிவகார்த்திகேயன் கேரியலில் மாபெரும் வசூல் குவித்த வெற்றிப் படமாக அமைந்துள்ளது. இந்த ஆண்டு அதிகம் வசூலித்த தமிழ் படங்களின் வரிசையிலும் இடம் பிடித்துள்ளது.
இப்படம் ரசிகர்கள், சினிமா விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தை சினிமாத்துறையினரும் பாராட்டி வருகின்றனர்.
விஜயின் பூவே உனக்காக படத்தை இயக்கிய விக்ரமன்,”நான் எல்லா படங்களையும் பார்ப்பேன். அமரன் படத்தைப் பார்த்து தேம்பி தேம்பி அழுதுவிட்டேன்.
சிவகார்த்திகேயன் முகுந்தாவே வாழ்ந்திருந்தார். சாய்பல்லவி Extraordinary ஆ பெர்பார்ம் பண்ணி இருந்தாங்க. முகுந்த் இறந்து போய்விடுவார் கதை என்னன்னு தெரியும்.
எல்லோருக்கும் தெரிஞ்ச கதையில கடைசியில அழ வைச்சிட்டாங்க பாருங்க. அதுதான் இப்படத்தோட வெற்றி என்று கூறினார்.