புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சிவகார்த்திகேயன் தாக்கி பேசிய அந்த 3 பேர் யார்.? மொத்த சர்ச்சைக்கும் கொட்டுக்ககாளி போட்ட பிள்ளையார் சுழி

சூரியின் கொட்டுக்ககாளி பட ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் பேசிய அனைவரும் சர்ச்சை கருத்துக்களையே முன்வைத்தனர். மைக் கிடைத்து விட்டால் வாயிலிருந்து கெட்ட வார்த்தைகளாக பேசக்கூடிய மிஸ்கினும் தம் பங்கிற்கு அசிங்கமாக பேசினார்.

ஒரு மேடை நாகரீகம் தெரியாமல் பல பேர் முகம் சுளிக்கும் விதமாக மிஸ்கின் பேசிய பேச்சு மொத்த ஆடிட்டோரியத்தையும் கூச்சப்பட வைத்தது. இந்த படத்தை நீங்கள் பார்க்க தயாராக இருந்தால் நான் அவுத்து போட்டு ஆடுகிறேன் என்றெல்லாம் அருவருப்பு பேச்சை முன்வைத்தார்.

மிஸ்கின் பேசிய பிறகு சிவகார்த்திகேயன் உள்குத்தாக சில நிமிடங்கள் பேசினார். நான் மற்றவர்களை போல் அவரை வளர்த்து விட்டது நான் தான், இவரை வளர்த்து விட்டது நான் தான் என்றெல்லாம் கூற மாட்டேன். ஆனால் என்னை அப்படி சொல்லியே பழகிவிட்டனர் என்று சில பேரைச் குத்திப் பேசினார். இப்பொழுது அந்த மூன்று பேர் யார் என்று தெரிய வந்துள்ளது.

மொத்த சர்ச்சைக்கும் கொட்டுக்ககாளி போட்ட பிள்ளையார் சுழி

தனுஷ்: ஒரு போதும் எந்த மேடையிலும் தனுஷ் சிவகார்த்திகேயனை வளர்த்து விட்டதாக கூறியதில்லை. ஆனால் இருவரும் “3” படத்திற்கு பின் இணையவே இல்லை. இதனால் இவர்களுக்குள் ஏதோ உள்கட்சி பூசல் இருக்கிறது என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.

பாண்டிராஜ்: ஆரம்ப காலத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பல படங்களை பண்ணினார் பாண்டிராஜ். சிவகார்த்திகேயன் தொடர்ந்து மூன்று படங்கள் பாண்டிராஜுக்கு பண்ணுவதாக இருந்தது ஆனால் ஆரம்ப கட்டத்தில் தனுஷ் வாங்கிய சம்பளம் வேறு இப்பொழுது வாங்கிக் கொண்டிருக்கும் சம்பளம். இதனால் இவர்களுக்குள் ஒரு பெரிய பனிப்போர் இருந்து வருகிறது. அதனால் பாண்டிராஜ் ஏதாவது பேசி உள்ளாரா என்பது கூட தெரியவில்லை.

ஆரம்ப கால தயாரிப்பாளர்: சிவகார்த்திகேயனுக்கு ஆரம்ப காலகட்டத்தில் உதவிய தயாரிப்பாளர்களுக்கு இப்பொழுது அவர் படம் பண்ண மறுக்கிறார் என அவர்கள் ஏதாவது பொதுவெளியில் பேசினார்களா என்று தெரியவில்லை இதை கூட மனதில் வைத்து எஸ்கே பேசினாரா என்பது புரியாத புதிராய் இருக்கிறது.

Trending News