ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

சிவகார்த்திகேயனை தூக்கிவிட இமான் இசையமைத்த 5 படங்கள்.. ஊதா கலரு ரிப்பன் இல்லனா நீங்க காலி ப்ரோ

Sivakarthikeyan – Imman: இசையமைப்பாளர் இமானின் சமீபத்திய இன்டர்வியூ ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் புரட்டிப்போட்டு இருக்கிறது. பேமிலி ஆடியன்ஸ் அதிகம் இருக்கும் சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்து விட்டதாக இமான் சொன்னது அவருடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது. இமான் மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணி ஒரு காலகட்டத்தில் கொடிகட்டி பறந்தது. உண்மையை சொல்லப்போனால் இமானின் நிறைய பாட்டுக்கள் தான் சிவாவை குழந்தைகளிடம் கூட்டி சென்றது என சொல்லலாம். இந்த காம்போவில் வெளியான 5 படங்களை பற்றி பார்க்கலாம்.

மனம் கொத்தி பறவை: நடிகர் சிவகார்த்திகேயனை காதல் மற்றும் சென்டிமென்ட் கலந்த ஹீரோவாக காட்டிய முதல் படம் மனம் கொத்தி பறவை. இந்த படத்தில் சிவாவை ஹீரோவாக நடிக்க வைக்க பரிந்துரைத்ததே இமான் தான் என அவர் தன்னுடைய பேட்டியில் சொல்லி இருக்கிறார். இந்த படத்தில் வரும் என்ன சொல்ல ஏது சொல்ல, டங் டங், ஊரான ஊருக்குள்ள, ஜல் ஜல் ஓசை போன்ற பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டானது.

ரஜினி முருகன்: சிவகார்த்திகேயன் மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்த ரஜினி முருகன் படத்தில் வரும் என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா பாடல் ஒரு காலகட்டத்தில் குழந்தைகளின் தேசிய கீதமாக இருந்தது. மேலும் உன் மேல ஒரு கண்ணு, ராசாத்தி ராசாத்தி போகாத சூடேத்தி போன்ற பாடல்கல் எல்லாம் இந்த படத்தின் மிகப்பெரிய பிளஸ் ஆக இருந்தது.

வருத்தப்படாத வாலிபர் சங்கம்: கிராமத்து இளைஞர்களை சிவகார்த்திகேயனின் பக்கம் திருப்பிய படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இந்த படத்தில் தான் அவர் முதல் முதலில் பாடகராகவும் அறிமுகமானார். இந்த படத்தில் வரும் ஊதா கலரு ரிப்பன் பாடல் தான் சிவகார்த்திகேயனை குழந்தைகள் ரசிப்பதற்கு அதிக காரணமாக இருந்தது. வருத்தப்படாத வாலிபர் சங்கம் பாக்காத பாக்காத போன்ற பாடல்களும் பட்டையை கிளப்பியது.

நம்ம வீட்டு பிள்ளை: சிவகார்த்திகேயனை குடும்பங்கள் கொண்டாடும் நாயகனாக மாற்றிய படம் தான் நம்ம வீட்டுப் பிள்ளை. தமிழ் சினிமாவில் பல வருடங்களுக்குப் பிறகு அண்ணன் தங்கச்சி சென்டிமென்ட்டை இந்த படம் கண்ணில் காட்டியது. இதில் வரும் உன் கூடவே பொறக்கணும், மயிலாஞ்சி, கும்முரு டப்பரு போன்ற பாடல்கள் சூப்பர் ஹிட் அ டித்தது.

 

Trending News