வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கேரக்டரை மாத்த சொல்லி அதிகப்பிரசங்கித்தனம் செய்த சிவகார்த்திகேயன்.. அப்படியே வச்சு ஹிட்டடித்த கார்த்திக் சுப்புராஜ்

தமிழ் சினிமாவின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து வரும் சிவகார்த்திகேயன் சாதாரண மிமிக்கிரி ஆர்ட்டிஸ்டாக வளம் வந்து பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். பின்னர் தன்னை தானே வளர்த்துக் கொண்டார். இவரது பேச்சு எதார்த்தமாக மிகவும் நகைச்சுவையாக இருப்பதால் எளிதாக அனைவரையும் கவர்ந்தார். ஒரு சில படங்களில் தலைகாட்டி பின்னர் படிப்படியாக உயர்ந்து இப்பொழுது மிகப்பெரிய ஹீரோவாக வலம் வருகிறார்.

என்னதான் சிவகார்த்திகேயன் நகைச்சுவையாக பேசினாலும் அவர் மனதுக்குள் வியாபாரா ரீதியாக பல விஷயங்களை வைத்துதான் படங்களில் நடிக்கிறார் என்று தெரிகிறது. சிவகார்த்திகேயன் தற்பொழுது படத்தில் நடிக்க பல கண்டிஷன்கள் போடுவதும், இயக்குநரின் கதையில் தலையிடுவதும், சம்பளத்தை உயர்த்தி கேட்பதும் என இருந்து வருகிறார்.

Also Read : புகழ் போதையில் நன்றி மறந்து சிவகார்த்திகேயன்.. தம்பி பிரதீப் பார்த்து கத்துக்கோங்க ப்ரோ!

ஆனால் இவர் மார்க்கெட் இல்லாத நேரத்தில் அதாவது கேடி ரங்கா கில்லாடி பில்லா படத்தில் இவர் ஒரு சாதாரண ஹீரோவாக நடித்தார். அப்போது இவருக்கு ஜிகர்தண்டா படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. அந்த படத்தில் சித்தார்த் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க கார்த்திக் சுப்புராஜ் அழைப்பு விடுத்திருந்தார்.

ஆனால் மிகப் பெரிய வாய்ப்பு என்று தெரியாமல் அப்போது கார்த்திக் நான் இந்த கேரக்டரில் நடித்தாள் வில்லன் கேரக்டரில் சத்யராஜ் இல்லையென்றால் சீனியர் நடிகர்கள் நடித்தால் மட்டுமே நான் நடிப்பேன் என முகத்தில் அடித்தவாறு கூறிவிட்டார். இரண்டு படங்கள் கூட ஒழுங்காக நடிக்கவில்லை அதற்குள் இவ்வளவு திமிரா என்று கார்த்திக் சுப்புராஜ் எந்த பதிலும் கூறாமல் எழுந்து வந்துவிட்டார்.

Also Read : ஆன்லைன் மாஃபியாக்களுக்கு இரையாகும் சிவகார்த்திகேயன்.. திடீர் வளர்ச்சியால் ஏற்பட்ட வயிற்றெரிச்சல்

பின்னர் சிவகார்த்திகேயன் தேவையில்லை என்று முடிவு செய்து சித்தார்த்தை அதில் நடிக்க வைத்தார். வில்லனை மாற்றாமல் பாபி சிம்ஹாவை நடிக்க வைத்து படத்தை மிகப்பெரிய வெற்றியை அடைய வைத்தார் இயக்குனர். அப்போது அந்த படத்தில் நடிக்கும்போது நல்ல மார்க்கெட்டில் இருந்த சித்தார்த் அந்த நடிப்பின் அவசியத்தை புரிந்து நடித்து பெயர் பெற்றார்.

ஆனால் இப்பொழுது சிவகார்த்திகேயன் பற்றி தெரிந்தவர்கள் அவரை பற்றி கூறுகையில் நடிப்பில் முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க அவர் தயங்குகிறார் சாதாரணமாக நகைச்சுவை மற்றும் பெரிய கதாநாயகிகளுடன் டூயட் பாடுவது மற்றும் எளிதான கதாபாத்திரங்களில் நடித்து வெற்றி பெற வேண்டும் என்று நினைத்து நடித்து வருகிறார். தன்னை ரஜினி மற்றும் விஜய்யாக நினைத்து அதனால் நல்ல வாய்ப்புகளை ஏற்க மறுக்கிறார் என்று இப்போது அவரிடம் பழகிய முக்கிய இயக்குனர்கள் கூறிவருகிறார்கள்.

Also Read : ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறாரா?. அதிர்ச்சியை ஏற்படுத்திய புகைப்படம்

Trending News