பொதுவாக ஹீரோக்கள் ஒரு கட்டத்திற்கு மேல் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக பல முயற்சிகள் மேற்கொள்கிறார்கள். அதில் ஒன்று தான் தயாரிப்பாளராக மாறுவது. அவ்வாறு சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்த நிலையில் தயாரிப்பாளராக சில படங்களை தயாரித்தார்.
ஆனால் அந்தப் படங்கள் தொடர் தோல்வியை தழுவியது. இதனால் கடனை அடைக்க அடுத்தடுத்த படங்களும் எடுத்து மிகப்பெரிய நஷ்டத்தில் மாட்டிக்கொண்டார். பல வருடங்களாகவே சிவகார்த்திகேயன்
இந்தக் கடனை அடைக்க முடியாமல் அவதிப்பட்டு வருவதாக கூறப்பட்டது. அதன் பிறகு டாக்டர், டான் என 100 கோடி வசூல் படங்களை சிவகார்த்திகேயன் கொடுத்திருந்தார்.
Also Read : கவுண்டமணியுடன் கூட்டணி போடும் சிவகார்த்திகேயன்.. 6 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ என்ட்ரி தரும் நக்கல் மன்னன்
இதன் மூலம் பாதி கடனை அடைத்து இருப்பார் என நினைத்த நிலையில் அவருக்கு கடன் கொடுத்தவர்களிடம் டக்கால்டி வேலை காண்பித்துள்ளார். அதாவது தொடர்ந்து படங்களில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் கடனை அடைக்காமல் ஏதோ சாக்குபோக்கு சொல்லி உள்ளார். இதனால் பொறுத்து பொறுத்து பார்த்துவிட்டு கடன் கொடுத்தவர்கள் சிவகார்த்திகேயன் ஏமாற்றுவதாக கருதி உள்ளனர்.
ஆகையால் சிவகார்த்திகேயன் மிகப்பெரிய பிரச்சனையில் மாட்டி இருக்கிறார். அதாவது பிரின்ஸ் பட தோல்விக்கு பிறகு சிவகார்த்திகேயன் மாவீரன் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் ரிலீசுக்கு காத்திருக்கிறது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் கடன் கொடுத்தவர்கள் மாவீரன் படத்தை வெளியிட பிரச்சனை செய்து வருகிறார்கள்.
Also Read : 100 கோடி கிளப்பில் இணைய காத்திருக்கும் 4 படங்கள்.. திட்டம் போட்டு காய் நகர்த்தும் சிவகார்த்திகேயன்
அதாவது தங்களுக்கு கொடுக்க வேண்டிய 35 கோடி பணத்தை கொடுத்தால் மட்டுமே தமிழ்நாடு முழுவதும் மாவீரன் படத்தை வெளியிடுவோம் என கூறியுள்ளனர். இது சிவகார்த்திகேயனுக்கு தற்போது பெரிய தலைவலியாக அமைந்துள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக சிவகார்த்திகேயன் பணத்தை கொடுத்திருந்தால் இந்நேரம் கடனையே அடைத்து இருக்கலாம்.
இப்போது இதுபோன்று ஒரு இக்கட்டான சூழ்நிலை வந்து இருக்காது. இதை எப்படி சமாளித்து வெளியே வர போகிறார், மாவீரன் படம் எப்படி வெளியே வரப் போகிறது என்று தெரியவில்லை. மேலும் இந்த படத்தை ரிலீஸ் செய்தால் தான் அடுத்ததாக சிவகார்த்திகேயன் அயலான் படத்தையும் வெளியிட முடியும்.
Also Read : 3வது முறையாக போட்டி போடும் சிவகார்த்திகேயன், கார்த்தி.. தீபாவளி ரிலீசுக்கு சரவெடியாக வரப்போகும் படங்கள்