ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

சிவகார்த்திகேயன் கிரீன் சிக்னல் காட்டியும் 3 வருஷத்துக்கு பின் டேக்ஆப் ஆன பிளைட்.. ரஜினிகிட்ட போய் வந்தும் கிடப்பில் போட்டது

Sivakarthikeyan joins with AR Murugadoss in SK 23:தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் அயலான் வெற்றிக்குப் பின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட SK21 திரைப்படத்தில் ராணுவ வீரராக நடித்து வருகிறார்.

இப்படத்திற்கான படப்பிடிப்பு காஷ்மீர் பகுதியில் மிகுந்த பொருட்செலவில் பல்வேறு தடைகளை மீறி நடைபெற்று வருகிறது. எஸ் கே ரசிகர்களை குஷி படுத்தும் பொருட்டு  SK21 படத்தின் டீசர் சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு விரைவில் வெளியாக உள்ளது.

SK21 படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளதால்  சிவகார்த்திகேயன் தனது அடுத்த ப்ராஜெக்ட்க்கான அச்சாரத்தை பலமாக ஒரு பலவானோடு போட்டுள்ளார். அந்த பலவான் யார் என்றால் கத்தி, துப்பாக்கி, சர்க்கார் என விஜய்க்கு மாபெரும் வெற்றி கொடுத்த இயக்குனர்தான்.

Also read: நிற்க நேரமில்லாமல் வரிசை கட்டும் 4 படங்கள்.. சிவகார்த்திகேயன் இடத்தை பிடிக்க தயாராகும் கவின்

தமிழ் சினிமாவில் அஜித்தின் தீனா படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் ஏஆர் முருகதாஸ் அவர்கள் வணிக ரீதியான வெற்றியை மட்டுமே எதிர்நோக்கி படம் இயக்காமல், சமூக அநீதிகளை எதிர்த்துப் போராடும்  தரமான செய்கைகளினால் மக்களால் நேசிக்கப்படும் தலைவனாக நாயகனை உருவாக்கி திரைக்கதையை விறுவிறுப்புடன் நகர்த்துவதில் வல்லவர்.

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த ரமணா, துப்பாக்கி, ஸ்பைடர், சர்க்கார் போன்ற படங்களின் வழியே சினிமாவை ஆயுதமாக்கி மக்களுக்காக குரல் கொடுத்து வருகிறார் ஏஆர் முருகதாஸ். தற்போது மூன்று ஆண்டுகளுக்குப் பின் ஏஆர் முருகதாஸ் மற்றும் சிவகார்த்திகேயன் இணையும் SK23 படம் அதிக எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

தலைவரின் தர்பாருக்கு பின் இந்த கதையை ரஜினியிடம் கூறியதாகவும் பின்பு தர்பாரின் தோல்வியால் சற்றே பின்வாங்கிய முருகதாஸ் சிவகார்த்திகேயனுடன் கூறி க்ரீன் சிக்னல் வாங்கியதாக கூறப்படுகிறது. இதற்கு இடைப்பட்ட காலத்தில் பாலிவுட்டில் ஒரு அனிமேஷன் படத்தில் பிசியாக இருந்ததால் கதை கிடப்பில் போடப்பட்டதாக கூறியுள்ளார் முருகதாஸ்.

எப்போதுமே ஹிட் அடித்த அனிருத் மற்றும் சிவகார்த்திகேயன் காம்போவில் உருவாகும் இப்படத்தில் நாயகியாக கன்னடத்து வரவு ருக்மணி வசந்த் என்ட்ரி ஆகிறார். எது எப்படியோ முருகதாஸின் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் நடிப்பில் துப்பாக்கிப் போன்று ஒரு தரமான படைப்பு ரசிகர்களுக்கு காத்திருக்கிறது.

Also read: தளபதியின் இடத்தை பிடிக்க ஓவர் பில்டப்.. உடம்பை புண்ணாக்கிய சிவகார்த்திகேயன்

Trending News