செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

லோகேஷை கவிழ்த்திய கருங்காலி.. கூட சேர்ந்து கெட்ட சிவகார்த்திகேயன்

Sivakarthikeyan- Lokesh Kanagaraj: விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில படங்களை மட்டுமே இயக்கினாலும், தற்போது இருக்கும் டாப் நடிகர்களின் ஃபர்ஸ்ட் சாய்ஸ் லோகேஷ் கனகராஜ் தான். அதேபோல் தான் படிப்படியாக முன்னேறி சினிமாவில் முன்னணி நடிகராக வெகு சீக்கிரமே வளர்ந்த நடிகர் சிவகார்த்திகேயன்.

சில மாதங்களுக்கு முன்பு நடந்த பிரஸ் மீட்டில், கருங்காலி மாலை அணிந்தால் நல்ல அமைதி தரும், செல்வம் பெருகும் நல்லதே நடக்கும் என்று அதைப்பற்றி ஆஹா ஓகோன்னு சிவகார்த்திகேயன் கருங்காலியை பற்றி பேசினார். இதனால் கள்ளச்  சந்தையில் கருங்காலி மாலையில் விற்பனையும் அமோகமாக நடந்தது.

கருங்காலி மாலையை லோகேஷ் கனகராஜ் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் அணிந்து ட்ரெண்டாக்கினார்கள். உண்மையில் இந்த கருங்காலி மாலையின் மகத்துவம் லோகேஷ் மற்றும் சிவகார்த்திகேயனுக்கு ஒர்க் அவுட் ஆகல.

Also Read: அரசியல் ஆசையில் காட்டும் ஓவர் பந்தா.. தளபதியால் தலை சுற்றி போன வெங்கட் பிரபு

நம்பி கெட்ட லோகேஷ்

விஜய்யை வைத்து லோகேஷ் எடுத்த லியோ படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் லியோ படத்தின் செகண்ட் ஆப் சொதப்பலாக அமைந்ததால் லோகேஷின் பெயர் டேமேஜ் ஆனது. மேலும் சிவகார்த்திகேயனின் பெயரைக் கெடுத்து தெருவில் இழுத்து விட்டுட்டார் இமான்.

இந்த ரெண்டு பேரு வாழ்க்கையிலும் விளையாடியது கருங்காலி மாலை தான். இந்த மாலையை நம்பி  துணிச்சலாக நிறைய விஷயத்தை செய்தார்கள். ஆனால் கடைசியில் அது காலை வாரிவிட்டது.

Also Read: தளபதி மீது சூர்யா குடும்பத்திற்கு இருக்கும் ஈகோ.. இவ்வளவு பொறாமையா?.

Trending News