Maaveeran Twitter Review: மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர் நடிப்பில் உருவான மாவீரன் இன்று பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கிறது. சில பல தடைகளை கடந்து ஆரவாரமாக ரிலீஸ் ஆகி இருக்கும் இப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களையும் பெற்று வருகிறது.

சரிதா, மிஸ்கின், யோகி பாபு உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படம் பற்றிய தங்கள் கருத்துக்களை ட்விட்டர் தளத்தில் ரசிகர்கள் வெளியிட்டு வருகின்றனர். அதில் முதல் பாதி முழுக்க கலகலப்புக்கு பஞ்சமில்லாமல் செல்வதாக படம் பார்த்த பலரும் கூறி வருகின்றனர்.
Also read: சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி விடமாட்டாரு.. மாவீரன் படத்தால் நொந்து போன இயக்குனர்
பொதுவாகவே சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள் அனைத்தும் ஆடியன்ஸை இம்ப்ரஸ் செய்யும் விதமாகத்தான் இருக்கும். அதன்படி இப்படத்தில் ஆக்சன், லவ் என அனைத்தும் ரசிகர்களை கவர்ந்தது மட்டும் இன்றி மிஷ்கின், சிவகார்த்திகேயன் இடையில் ஆன காட்சிகளும் ரசிக்கும் படி இருக்கின்றது.

அதேபோன்று யோகி பாபு வரும் காட்சிகளும் கலக்கலாக இருக்கிறது. அதிலும் இடைவேளை காட்சியும் அதை தொடர்ந்து வரும் திரைக்கதையும் வேற லெவலில் இருப்பதாகவும் ரசிகர்கள் ஆரவாரமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
Also read: பிரின்ஸ் படத்தால் தெலுங்கு பக்கம் சாய்ந்த சிவகார்த்திகேயன்.. ஏற்றிவிட்ட ஏணியை வாரி விடுவதா?
அதேபோல் இடைவேளைக்குப் பிறகு வரும் காட்சி எந்த தொய்வும் இல்லாமல் விறுவிறுப்பை கூட்டி இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் தற்போது பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்து கொண்டிருக்கும் மாவீரன் சிவகார்த்திகேயனுக்கு பெயர் சொல்லும் படமாக இருக்கும் எனவும் ரசிகர்கள் வாழ்த்துகின்றனர்.

அதிலும் இந்த முறை மிஸ் ஆகாது நிச்சயம் வசூலை தட்டி தூக்கி விடுவார் எனவும் படத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இப்போது இப்படத்தின் முதல் காட்சியை பட குழுவினரோடு சங்கீதா விஜய் உள்ளிட்ட பல பிரபலங்களும் பார்ப்பது படத்திற்கான பிரமோஷனாக மாறி இருக்கிறது.
