வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

தட்டு தடுமாறி 100 கோடி வசூலை தொட முடியாத மாவீரன் சிவகார்த்திகேயன்.. அதிகாரப்பூர்வமாக வெளிவந்த ரிப்போர்ட்

 Maaveeran Collection: டாக்டர், டான் போன்ற படங்களில் 100 கோடி வசூலை வாரி குவித்த சிவகார்த்திகேயனுக்கு அடுத்ததாக பிரின்ஸ் படம் படு தோல்வியாக அமைந்தது. அதன் பின்பு கடந்த ஜூலை 14ஆம் தேதி வெளியான மாவீரன் படத்தின் மூலம் மறுபடியும் 100 கோடியை பாக்ஸ் ஆபிஸில் தட்டி தூக்க வேண்டும் என்ற வெறியுடன் இருந்தார்.

ஆனால் மாவீரன் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்ததால் அவ்வளவு சுலபமாக 100 கோடியை வசூலிக்க முடியவில்லை. இப்போதுதான் தட்டு தடுமாறி 100 கோடியை நெருங்கி இருக்கிறது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படத்தின் தயாரிப்பு நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

Also Read: சிவகார்த்திகேயனுக்கு ஃபோன் போட்ட ரஜினி.. ஜெயிலர் பிரமோஷனுக்காக இப்படி ஒரு உருட்டா!

மாவீரன் படம் ஒரே வாரத்தில் 50 கோடி ரூபாய் வசூலையும், அதன் தொடர்ச்சியாக இரண்டாவது வாரத்தில் 75 கோடி வசூலையும் குவித்தது. தற்போது இந்த படம் உலகம் முழுவதும் 89 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக மாவீரன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சாந்தி டாக்கீஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இன்னும் ஒரு சில நாட்களில் நிச்சயம் 100 கோடியை எட்டி விடும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் அதிதி சங்கர். மிஸ்கின், யோகி பாபு, சுனில், சரிதா, மோனிஷா உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

Also Read: 50 கோடிக்கு மேல் கஜானாவை நிரப்பிய சிவகார்த்திகேயனின் 6 படங்கள்.. மேஜிக்கோடு லாஜிக் காட்டிய மாவீரன்

மடோன் அஸ்வின் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட இரண்டு மொழிகளில் வெளியான இந்த படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார். தற்போது இந்த படத்திற்கு எதிர்பார்த்த அளவு வசூல் கிடைத்ததால் அடுத்ததாக படத்தினை ஓடிடி-யிலும் ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளனர்.

அதன்படி ஆகஸ்ட் 11ஆம் தேதி ஆன நாளை மாவீரன் திரைப்படம் அமேசான் ஓடிடி ப்ரைம் தளத்தில் வெளியாகி அங்கேயும் லாபம் பார்க்க போகிறது. மேலும் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு சூப்பர் ஹீரோ போன்ற கதாபாத்திரத்தில் நடித்து மற்ற படங்களை விட வித்தியாசம் காட்டினார். இருப்பினும் இந்த படம் முக்கி தக்கி தான் 100 கோடியை வசூலிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Also Read: சிவகார்த்திகேயன் தலைமறைவுக்கு இதுதான் பின்னணியா.? அஜித்தை பார்த்து இப்படியா அட்டகாப்பி அடிப்பது

Trending News