புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சர்ச்சையை கிளப்பி தானே குழியில் விழுந்த சிவகார்த்திகேயன்.. விஷத்தை அள்ளி தெளிக்கும் ரஜினி முருகன்

சிவகார்த்திகேயனை சினிமாவில் அணு அணுவாய் பார்த்து பார்த்து வளர்த்தவர் ஆர் டி ராஜா. சிவகார்த்திகேயனும் இவரும் விஜய் டிவியில் ஒன்றாய் வேலை பார்த்தவர்கள் அங்கே ஆரம்பித்தது தான் இவர்களுக்கு உண்டான நட்பு. சிவகார்த்திகேயனுக்கு வலது கரமாகவும், மேனேஜராகவும் இருந்து வந்தார் ஆர்டி ராஜா.ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே சிவகார்த்திகேயனை பெரிய ஹீரோக்களுக்கு நிகராக நடத்தும் படி செய்தார் ஆர்டி ராஜா.

ஒரு காலகட்டத்திற்கு பின் இருவரும் பிரிந்து விட்டனர். இவர்களுக்கு அடுத்தபடியாக சிவகார்த்திகேயனுடன் நெருங்கிய நட்பில் இருந்தவர் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன். இப்பொழுது மதன் கூடவும் சிவகார்த்திகேயனுக்கு அந்த அளவிற்கு நெருக்கம் இல்லை. இப்படி வளர்த்து விட்டவர்கள் ஒவ்வொருத்தரையும் சிவகார்த்திகேயன் கட் பண்ணிவிட்டார்.

இப்படி தன்னை வளர்த்து, அந்த இடத்திற்கு கொண்டு வந்து பேச வைத்தவர்களை எல்லாம் சிவகார்த்திகேயன் மறந்துவிட்டார். சமீபத்தில் கொட்டுக்காளி படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது அந்த விழாவில் மொத்த சர்ச்சைக்கு பிள்ளையார் சுழி போட்டார் சிவகார்த்திகேயன்.

விஷத்தை அள்ளி தெளிக்கும் ரஜினி முருகன்

கொட்டுக்காளி படத்தை தயாரித்தவர் சிவகார்த்திகேயன் தான். அவரே அந்த பட விழாவில், என்னை வளர்த்து விட்டார்கள் என கூறுவது பேஷனாகி போச்சு என சர்ச்சையான விஷயங்களை பேசினார். அவர் மட்டும் இல்ல அந்த மேடையில் பேசிய அனைவரும் சர்ச்சையாகவே பேசினார்கள். சமீபத்தில் சிவகார்த்திகேயன் செல்லும் இடமெல்லாம் சர்ச்சையாகவே மாறுகிறது.

இதுவே கொட்டுக்காளி டத்திற்கு ஒரு நெகட்டிவ் பப்ளிசிட்டியாக மாறும் என்பது தான் அவர்களது எண்ணம். சிவகார்த்திகேயன் தனுசை மனதில் வைத்து தான் இப்படி பேசி உள்ளார் என்பது அனைவரது எண்ணம். ஆனால் தனுஷ் ஒரு போதும் சிவகார்த்திகேயனை வளர்த்துவிட்டது நான்தான் என்று கூறியது கிடையாது.

Trending News