ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

தளபதியின் இடத்தை பிடிக்க ஓவர் பில்டப்.. உடம்பை புண்ணாக்கிய சிவகார்த்திகேயன்

Sivakarthikeyan marks Vijay’s place in tamil cinema: எந்த ஒரு பலமான பின்புலமும் இல்லாமல் வெள்ளி திரையில் ஜொலித்துக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி அபாரமானது.  சின்னத்திரையின் மூலம் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட சிவகார்த்திகேயன் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராவார்.

உலக நாயகன் கமலின் தயாரிப்பில் உருவாக உள்ள SK 21 படத்தை ராஜ்குமார் பெரியசாமி அவர்கள் இயக்குகிறார். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட ராணுவ வீரரின் கதாபாத்திரத்தில் தோன்றும் சிவகார்த்திகேயனுடன் சாய்பல்லவி, ராஷ்மிகா மந்தனா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

படத்தின்  பெரும்பாலான காட்சிகள் காஷ்மீர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் படமாக்கப்பட்டன இறுதி கட்டத்தை எட்டும் சிவகார்த்திகேயனின் SK 21 படத்தின் டீசரை சிவகார்த்திகேயனின் பிறந்த நாளான, பிப்ரவரி 16 அன்று வெளியிட போவதாக ராஜ் கமல் பிலிம்ஸ் தனது வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.

Also read: ஓவர் பில்டப் கொடுக்கும் சிவகார்த்திகேயன்.. இது எல்லாம் எங்க போய் முடிய போகுதோ!

காமெடிக்காகவே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்பங்கள் கொண்டாடி வந்த சிவகார்த்திகேயன் தற்போது காமெடி ட்ராக்கில் இருந்து கொஞ்சம் விலகி முழுக்க முழுக்க ஆக்சனை தெறிக்க விட்டு  SK 21 ல் அதிரடி காட்ட வருகிறாராம். இதற்காக, இவர் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என பல்வேறு அவதாரங்களை எடுத்து வரும் சிவகார்த்திகேயன் தொலைநோக்கு சிந்தனையுடன் பல்வேறு திட்டங்களை தீட்டி தமிழ் சினிமாவின் இளைய தளபதியின் இடத்திற்கு அடி போட்டு வருகிறார் என்பது சினிமா ஆர்வலர்களின் கருத்து.

இதைப்போல் சிவகார்த்திகேயன் மற்றும் ஏ ஆர் முருகதாஸ் இணையும் அடுத்த படம்  மார்ச் மாதத்தில் ஆரம்பிக்க உள்ளது. அதுவும் விஜய்யின் கத்தி, துப்பாக்கி படம் மாதிரி கலவையாக இருக்குமாம். விஜய்யின் அரசியல் போக்கால்  தமிழ் சினிமாவில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிறைவு செய்யும் வண்ணம் நடனம் மற்றும் ஆக்சன் படங்களாக தேர்ந்தெடுத்து எல்லா விதத்திலும் விஜய்க்கு நிகராக நான் இருக்கிறேன் என காட்டுகிறார் SK. புலியை பார்த்து பூனை சூடு போட்டு கொள்வது என்பதை சினிமாவோடு நிறுத்திக் கொண்டால் சரிதான்.

Also read: நரிதந்திரத்தை அரங்கேற்றும் புஸ்ஸி ஆனந்த்.. இளையதளபதியை கண்அசைவில் ஆட்டி வைக்கும் கொடூரம்!

Trending News