திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சிவகார்த்திகேயன் தவறவிட்ட தேசிய விருது வாங்கிய படம்.

நடிகர் சிவகார்த்திக்கேயன் சின்ன திரையில் இருந்து தனது கடின உழைப்பால் வெள்ளித்திரையில் கால் பதித்தார். இவர் தொடர்ச்சியாக பல படம் ஹிட் கொடுத்தார் தற்பொழுது மிக வேகமாக சினிமாவில் வளர்ந்து வருகிறார்.

இவர் வேலைக்காரன் படத்தை தொடர்ந்து சீமராஜா படத்தில் நடித்து வருகிறார் பொன்ராம் இயக்கத்தில் இதை தொடர்ந்து ரவிகுமார் இயக்கத்தில் ஒரு சயின்ஸ் பிக்சன் படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இவர் தமிழ் சினிமாவில் நடிக்க வந்ததில் இருந்து இதுவரை எந்த ஆடிஷனுக்கும் சென்றது இல்லையாம், வழக்கு எண் 18/9 படத்தில் ஸ்ரீ கேரக்டரில் நடிப்பதற்கு முதன் முதலில் தேர்ந்தெடுத்தது சிவகார்த்திகேயனை தானாம்.

ஆனால் சில காரணங்களால் நடிகர் சிவகார்த்திக்கேயனால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது, இந்த படம் தேசிய விருது வாங்கியது, இந்த படத்தில் சிவா நடித்திருந்தால் இன்னும் படும் வேகமாக சினிமாவில் வளர்ந்திருப்பார் என தெரிகிறது இதை நினைத்து சிவா வருத்தமடைந்துள்ளார்.

Trending News