வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

5 வருஷமா வாய்ப்பில்லாமல் இருந்த சிவகார்த்திகேயன் பட நடிகை.. குடித்து மட்டை ஆனதால் வந்த ஆப்பு

Sivakarthikeyan Movie Actress:  சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்து நடித்து விட்டாலே அந்த நடிகை டாப் ஹீரோயின்கள் லிஸ்ட்டில் இணைந்து விடுவார். இப்படித்தான் கீர்த்தி சுரேஷ், பிரியங்கா மோகன் உள்ளிட்ட அனைவரும் இப்போது தமிழை தாண்டி மற்ற மொழிகளிலும் பிரபலமாகியுள்ளனர்.

ஆனால் முன்னணி அந்தஸ்தை நோக்கி சென்றும் கூட ஒரு நடிகை கடந்த ஐந்து வருடமாக வாய்ப்பு இல்லாமல் தவித்திருக்கிறார். அதன்படி சிவகார்த்திகேயனுடன் வருத்தப்படாத வாலிபர் சங்கம், காக்கிச்சட்டை உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை இம்ப்ரஸ் செய்தவர் தான் ஸ்ரீதிவ்யா.

குடும்பப்பாங்கான தோற்றத்தில் துருதுருவென நடிக்கும் இவருக்கு ரசிகர்களும் ஆதரவு கொடுத்தனர். அதனாலேயே அடுத்தடுத்து விக்ரம் பிரபு, விஷால், ஜீவா, விஷ்ணு விஷால் என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு அவர் தமிழில் எந்த படத்திலும் நடிக்கவில்லை.

Also read: மசாஜ் சென்டரால் சிக்கிய சிவகார்த்திகேயன்.. அந்த மாதிரி தொழிலா.? பயில்வான் கிளப்பிய சர்ச்சை

இதற்கு முக்கிய காரணம் ஒரு பார்ட்டியில் அவர் குடித்து மட்டையானது தான். பிரபல காமெடி நடிகர் ஒருவரின் பாட்டியில் கலந்து கொண்ட ஸ்ரீதிவ்யா அளவுக்கு அதிகமாக குடித்து நடக்க முடியாத அளவுக்கு தள்ளாடி இருக்கிறார்.

அது குறித்த போட்டோக்கள் லீக் ஆனதில் ஸ்ரீதிவ்யாவின் பெயர் படுமோசமாக டேமேஜ் ஆனது. அதைத்தொடர்ந்து அவருக்கு எந்த புது பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. இதனால் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்த அவர் 2022 ஆம் ஆண்டு மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்தார்.

ஆனால் தமிழில் அவருக்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. கிட்டத்தட்ட தமிழ் ரசிகர்கள் அவரை மறந்து போய்விட்டார்கள் என்றே சொல்லலாம். அந்த சமயத்தில் தான் விக்ரம் பிரபுவின் ரெய்டு படத்தில் மீண்டும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இப்படியாக ஸ்ரீதிவ்யா தனக்குத்தானே சூனியம் வைத்தது போல் குடியால் கெரியரை கெடுத்துக் கொண்டுள்ளார்.

Also read: மீண்டும் கடனாளியான சிவகார்த்திகேயன்.. ஏலியன் கூடவே போயிற வேண்டியதான்

Trending News