செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

பணத்திமிரை காட்டிய சிவகார்த்திகேயன் பட நடிகை.. மொத்த கேரியரே போய்விடும் என கெஞ்சும் நிலைமை

வளர்ந்து வரும் நாயகனாக இருந்த சிவகார்த்திகேயன் தற்போது முன்னணி அந்தஸ்தில் கொடி கட்டி பறக்கிறார். அதனாலேயே இவருடன் நடிப்பதற்கு பல நடிகைகளும் போட்டி போட்டு வருகின்றனர். அதில் இவருடன் அடுத்தடுத்து இரண்டு படங்களில் ஜோடி போட்ட நடிகை தற்போது ஓவர் பண திமிரில் ஆட்டம் போடுகிறாராம்.

அந்த வகையில் தமிழில் சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் பிரியங்கா அருள் மோகன். முதல் படமே மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. அதில் எதற்கும் துணிந்தவன், டான் போன்ற திரைப்படங்கள் அவருடைய கேரியரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது.

Also read: அவர் கூட எல்லாம் நீ நடிக்க கூடாது.. ஜோதிகாவுக்கு கடிவாளம் போட்ட சூர்யா..

தற்போது தனுசுக்கு ஜோடியாக கேப்டன் மில்லர் திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார். அது மட்டுமல்லாமல் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடிக்கவும் இவர் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அதனாலேயே இப்போது அவருக்கு கொஞ்சம் தலைக்கனம் கூடிவிட்டது. ஏனென்றால் இப்போது தமிழ் திரையுலகின் மோஸ்ட் வான்டட் ஹீரோயின் இந்த அம்மணி தான்.

இந்நிலையில் இவர் நடித்து ரிலீசாகாமல் கிடப்பில் கிடந்த ஒரு திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதை கேள்விப்பட்ட பிரியங்கா அந்த பட தயாரிப்பாளருக்கு போன் செய்து அந்த படத்தை வெளியிட வேண்டாம் என்று கெஞ்சி கேட்டிருக்கிறார். ஏனென்றால் தற்போது அப்படம் வெளிவந்தால் தன்னுடைய மார்க்கெட் காலி ஆகிவிடும் என்ற பதட்டத்தில் அவர் இருக்கிறாராம்.

Also read: பிரின்ஸ் தோல்விக்குப்பின் வரிசை கட்டி நிற்கும் சிவகார்த்திக்கேயன் 5 படங்கள்.. ரஜினி ஸ்டைலில் எகிற விட்ட மாவீரன்

அதனால் அவர் இப்போது அந்த தயாரிப்பாளரிடம் படம் இப்போது ரிலீஸ் ஆனால் என் இமேஜ் குறைந்து விடும் என்றும் படத்தை ரிலீஸ் செய்யும் முயற்சியை கைவிடுங்கள் என்றும் கூறியிருக்கிறார். மேலும் படத்திற்காக எவ்வளவு செலவானதோ அந்த பணம் மொத்தத்தையும் நானே கொடுத்து விடுகிறேன் என்று தன் பணத்திமிரையும் காட்டி இருக்கிறார்.

இதுதான் தற்போது திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இரண்டு படம் ஹிட் ஆனவுடன் இப்படி ஓவர் ஆட்டம் போடும் பிரியங்காவின் நடவடிக்கை குறித்து பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். ஏற்கனவே இவர் சம்பள விஷயத்தில் கரார் காட்டுகிறார் என்ற குற்றச்சாட்டு இருக்கும் நிலையில் இந்த சர்ச்சையும் அவருடைய கேரியருக்கு பாதிப்பாக வந்திருக்கிறது.

Also read: தனுஷுக்கு அதிர்ஷ்ட நாயகனாக மாறிய வாரிசு நடிகர் .. கூட்டணி போட்ட 3 படமும் சூப்பர் ஹிட்டுன்னா சும்மாவா

Trending News