வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

பேராசைப்பட்டு சிக்கலில் சிக்கிய சிவகார்த்திகேயன்.. இப்போ என்ன பண்ணாலும் அடி நிச்சயம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி மிகவும் பிஸியாக இருக்க கூடிய நடிகராக மாறிவிட்டார். சினிமாவிற்குள் நுழைந்து வெகு சில காலம் தான்ஆகி இருந்தாலும், குறைந்த படங்கள் நடித்திருந்தாலும் தமிழ் சினிமாவில் இப்படி செய்தால் தான் முன்னேற முடியும் என்று பல்வேறு யுக்திகளை கையாண்டு இன்று மார்க்கெட்டில் உச்சத்தில் இருக்கிறார். இப்படிப்பட்ட சிவகார்த்திகேயன் தன்னுடைய சொந்தத் தயாரிப்பில் பல படங்களை நடித்து வந்தார்.

அந்த படங்கள் நல்ல வெற்றியையும் அவருக்குக் கொடுத்தது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல தயாரிப்பாளர் தான் சிவகார்த்திகேயன் என்று சொல்லும் அளவிற்கு பல படங்கள் அவருக்கு கைகொடுத்து இருந்தது. இந்த சமயத்தில் சிவகார்த்திகேயன் பேசாமல் நாம் நம்முடைய தயாரிப்பிலேயே நடித்திருக்கலாம் என்று சொல்லும் அளவிற்கு பிரச்சனை அவரை சுற்றி சுழல ஆரம்பித்திருக்கிறது. காரணம் தற்போது தன்னுடைய தயாரிப்பில் இருந்து கொஞ்சம் வெளியில் சென்று பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்களோடு ஹீரோவாக ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கின்றார்.

அதிலும் முக்கியமாக முன்னணி தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ், ஏஜிஎஸ், நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் என பல கம்பெனிகளுக்கு சிவகார்த்திகேயன் படம் பண்ணுகிறார். சரி இதில் என்ன சிக்கல் பெரிய கம்பெனி நல்ல வாய்ப்பு சிவகார்த்திகேயன் அதை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் அவ்வளவுதானே என்று நினைப்பவர்களுக்கு, சிக்கலே சிவகார்த்திகேயன் இப்படி வரைமுறை இல்லாமல் இஷ்டத்திற்கு ஒரே நேரத்தில் ஒத்துக்கொண்டது தான்.

குண்டாங் குழையாக இவர் இப்படி மூன்று பெரிய கம்பெனிகளுக்கு வாய்ப்பு கொடுத்து விட்டு இப்போது எந்த கம்பெனிக்கு நாம் முதலில் கால்சீட் கொடுப்பது என்று திணறி வருகிறார். மூன்றில் ஒரு கம்பெனியை கூட விட்டுக் கொடுக்க முடியாது அப்படிப்பட்ட மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனங்களை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறார் சிவகார்த்திகேயன். அதுமட்டுமின்றி இந்த மூன்று நிறுவனங்களிடம் இருந்தும் அட்வான்ஸ் வாங்கி விட்டாராம். இவருக்கு கால்ஷீட் கொடுத்தால் அவர் கோபித்துக் கொள்வார் அவருக்கு கால்ஷீட் கொடுத்தால் இவர் கோபித்துக்கொள்வார் என்று, யாருக்கு வாக்கு கொடுப்பது என்று தெரியாமல் முழித்து வருகிறாராம் சிவகார்த்திகேயன். ஏதாவது ஒன்றில் சறுக்கினாலும் நிச்சயமாக பெரிய அடி விழும் என்ற பயத்தோடு வேறு விழிபிதுங்கி நிற்கிறார்.

ஆனால் நியாயப்படி, முதலில் சத்யஜோதி பிலிம்ஸ் தான் அட்வான்ஸ் கொடுத்து இருக்கின்றனர். அதனால் அவர்களுக்கு கால்ஷுட் கொடுக்கலாம் என்று சிவகார்த்திகேயன் யோசித்துக் கொண்டிருக்கிறாராம். இன்று சிவகார்த்திகேயனின் வளர்ச்சி, மூன்று பெரிய நிறுவனங்கள் அவருக்காக காத்திருக்க வேண்டிய நிலையில் தமிழ் சினிமா அவரைக் கொண்டு போய் உச்சத்தில் உட்கார வைத்திருக்கிறது என சினிமா வட்டாரங்களில் கிசு கிசுக்கப்படுகிறது.

Trending News