தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளில் உருவாகும் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் தற்போது மிகவும் ஆர்வத்துடன் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் தற்போது காரைக்காலில் மிகவும் விறுவிறுப்புடன் படமாக்கப்பட்டு வருகிறது.
அந்த படத்தில் சிவகார்த்திகேயன் வாத்தியாராக நடிக்கிறார். அவருக்கு அப்பாவாக நடிகர் சத்யராஜ் நடிக்கிறார். இந்த கூட்டணியில் வித்தியாசமான ஹீரோயின் வேண்டும் என்று படக்குழு வெளிநாட்டு ஹீரோயின் ஒருவரை செலக்ட் செய்துள்ளது.
உக்ரைன் நாட்டில் இருந்து வந்த அந்த ஹீரோயின் படப்பிடிப்பு தளத்தில் எப்போதும் சோகமே உருவாக இருக்கிறாராம். ஏனென்றால் தற்போது உக்ரைன் நாட்டில் கடும் போர் நடந்து வருகிறது. அதனால் ஹீரோயின் அங்கு இருக்கும் தன்னுடைய சொந்தங்களை எண்ணி மிகவும் கவலையில் இருக்கிறாராம்.
எவ்வளவுதான் வருத்தம் இருந்தாலும் ஷார்ட் என்று வந்துவிட்டால் அவர் மிகவும் உற்சாகமாக கலந்து கொண்டு நடிப்பில் அசத்துகிறாராம். இதனால் சிவா உட்பட மொத்த படக்குழுவும் அவரின் நடிப்பை பார்த்து மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
எல்லாவற்றையும் மறந்து விட்டு கேரக்டராகவே மாறி நடிக்கும் அவர் ஷாட் முடிந்ததும் மீதும் சோகமாக அப்செட்டில் அமர்ந்து விடுகிறாராம். அவரை பார்ப்பதற்கே படக்குழுவினருக்கு மிகவும் பரிதாபமாக இருக்கிறதாம்.
மேலும் அவரை அதிலிருந்து வெளியே கொண்டு வருவதற்காக சிவகார்த்திகேயன் கலகலப்பாக எவ்வளவோ பேசிப் பார்த்தும் அவர் அந்த சோகத்தில் இருந்து வெளியே வராமல் இருக்கிறாராம். இதனால் என்ன செய்வது என்று தற்போது படக்குழுவினர் அனைவரும் தவித்து வருகிறார்கள்.