வெளிநாட்டு ஹீரோயினை தொக்கா தூக்கிய சிவகார்த்திகேயன்.. அறிவிப்பு போஸ்டரை வெளியிட்ட படக்குழு

சிவகார்த்திகேயன் நடிப்பில் அனுதீப் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப்படம் SK20. முதல் முறையாக சிவகார்த்திகேயன் தெலுங்கு இயக்குனருடன் கை கோர்ப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆனால் படம் தமிழ் மற்றும் தெலுங்கு மக்களுக்கு புடிக்கும் வகையில் இருக்கும் என படக்குழுவினர் கூறியுள்ளனர்.

அதாவது சிவகார்த்திகேயன் இப்படத்தில் முழு ஆக்ஷன் ஹீரோவாக நடிக்க உள்ளார். அதாவது ஒரு சில காட்சிகள் ஆக்ஷன் காட்சிகளாக இருந்தாலும் தெலுங்கு நடிகர்கள் மிரள வைக்கும் அளவிற்கு ஆக்சன் காட்சிகள் இருக்கப்போகிறது என கூறியுள்ளனர். மேலும் படத்தை வெளிநாடு மற்றும் இந்தியாவில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் கூறியுள்ளனர்.

சிவகார்த்திகேயன் இப்படத்தில் டூரிஸ்ட் கைடு கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். அப்படி ட்ராவல் ஏஜென்டாக இருக்கும் சிவகார்த்திகேயனுக்கு வெளிநாட்டிலிருந்து வரும் ஒரு பெண்ணுடன் காதல் ஏற்படுகிறது. இவர்கள் அந்த காதலை எவ்வாறு வெளிப்படுத்துகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.

அதனால் வெளிநாட்டு கதாநாயகியை ஒப்பந்தம் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். மேலும் உக்ரைன் நாட்டு நடிகை மரியா நடிக்க உள்ளார். இதனை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் இப்படத்தின் மூலம் சிவகார்த்திகேயன் வெளிநாட்டு நடிகையுடன் நடிக்கவுள்ளார்.

sk 20
sk 20

சிவகார்த்திகேயனின் படத்தை முழுவதுமாக நம்பி இருப்பதாகவும் இப்படம் ஹிட்டானால் சிவகார்த்திகேயன் சினிமா கேரியரில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் எனவும் கூறியுள்ளனர்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →