விவாகரத்து நடிகையுடன் ஜோடி சேரும் சிவகார்த்திகேயன்.. செம பொருத்தமான ஜோடி

சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்ட விவாகரத்து நடிகை தற்போது சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேரப்போவதாக கோடம்பாக்கம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  இளம் வயதில் துறுதுறுப்பான நடிப்பின் மூலம் பல ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் இந்த நடிகை.

சிவகார்த்திகேயன், சமந்தா உள்ளிட்டோர் 2018ஆம் ஆண்டு பொன்ராம் இயக்கத்தில் வெளியான சீமராஜா திரைப்படத்தில் இணைந்து நடித்தனர். அந்த திரைப்படத்தில் டி இமான் இசை அமைத்திருந்தார். அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும் சிவகார்த்திகேயன், சமந்தா ஜோடி பெருமளவு பேசப்பட்டது. தற்போது மீண்டும் இவர்கள் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிவகார்த்திகேயன் தற்போது முன்னணி நடிகராக வலம் வரும் நிலையில் இவரது டான் திரைப்படத்திற்கான ரிலிசுக்கு ரசிகர்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஏற்கனவே இந்த படத்தில் வெளியான 2 பாடல்களும் இணையத்தில் ஹிட் அடித்துள்ளது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் சமந்தாவுடன் மீண்டும் ஜோடி சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் விவாகரத்துக்கு பின்னர் தமிழில் மீண்டும் கால்பதிக்க சமந்தா ஆவலோடு இருக்கிறார். இந்நிலையில் நடிகர் யோகி பாபு நடிப்பில் 2021ஆம் ஆண்டு, ஓடிடி தளத்தில் வெளியான மண்டேலா திரைப்படத்தை இயக்கிய மடோனா அஷ்வின், நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சமந்தா காம்போவை வைத்து புதிய திரைப்படம் இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மண்டேலா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்த நிலையில் இயக்குனர் மடோனா அஷ்வின் மீண்டும் இந்த படத்தில் வெற்றியை கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பை ரசிகர்களுக்கு ஏற்படுத்தி உள்ளார்.

இந்த படம் காதல், காமெடி மட்டும் இல்லாமல்  சமுதாயத்தில் நடக்கும் அட்டூழியங்கள் வெளிக்கொண்டுவரும் படமாக இருக்கும் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →