வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

அஜித்தை வைத்து SK-க்கு கொக்கி போட்ட போனிகபூர்.. கல்லா கட்ட தயாராகும் அடுத்த கூட்டணி!

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் இளம் நடிகர் சிவகார்த்திகேயன். சென்ற ஆண்டு இவர் நடிப்பில் வெளியான டாக்டர் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தை தொடர்ந்து டான், அயலான் படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் மற்றும் அருண்ராஜா காமராஜ் இருவரும் கல்லூரி காலத்தில் இருந்தே நெருங்கிய நண்பர்கள். அருண் ராஜா சிவகார்த்திகேயனை நம்பி தான் சென்னைக்கு வந்தார். அதுமட்டுமல்லாமல் அருண் ராஜாவுக்கு சிவகார்த்திகேயன் பல உதவிகள் செய்துள்ளார். ஆரம்பத்தில் சிவகார்த்திகேயனும், அருண் ராஜாவும் ஒரே ரூமில்தான் தங்கி இருந்தனர்.

அதன்பிறகு அருண்ராஜா தமிழ் சினிமாவில் மிகவும் போராடி தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். நடிகர், பாடகர், பாடலாசிரியர், எழுத்தாளர், நகைச்சுவை நடிகர், இயக்குனர் எனப் பல பரிமாணங்களைக் கொண்டுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி படத்தில் இவர் எழுதிய நெருப்புடா நெருங்குடா பாடல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

சிவகார்த்திகேயனின் கனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு தன்னுடைய டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன் இடமும் அருண் ராஜாவை அறிமுகம் செய்தார் சிவகார்த்திகேயன். தற்போது அருண் ராஜா சிவகார்த்திகேயனுக்காகவே ஒரு கதை வைத்துள்ளார்.

இப்படத்தை போனிகபூர் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித்தின் மூன்று படங்களை தொடர்ந்து தயாரித்து வரும் போனிகபூர் தற்போது இளம் நடிகரான சிவகார்த்திகேயன் படத்தை முதல் முறையாக தயாரிக்க உள்ளார்.

அஜித்தின் வலிமை படத்திற்கு பிறகு போனிகபூர் ஏகே 61 படத்தை தயாரிக்க உள்ளார். இந்நிலையில் சிவகார்த்திகேயனுடன் போனிகபூர் இணையும் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News