வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

Sivakarthikeyan: SK 24 க்காக பாலிவுட் சென்ற நடிகையை ஜோடியாக்கி கொண்ட டான்! புதுவித பரிமாணத்தில் தோன்ற உள்ள சிவகார்த்திகேயன்!

Sivakarthikeyan paired Rashmika Mandanna for SK 24: தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். 

தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் திரைப்படத்திலும், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் எஸ்கே23 திரைப்படத்திலும் நடித்து வருகிறார் சிவா.

குடும்பங்கள் கொண்டாடும் நாயகனாக உயர்ந்துள்ள சிவா, அடுத்ததாக தனது டான் படத்தின் வெற்றி  இயக்குனர் சிபி சக்கரவர்த்தி உடன் SK24 இல் இணைய உள்ளார் 

கடந்த 2022 ஆண்டு வெளிவந்த சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் சிவகார்த்திகேயனை பள்ளி மாணவன், கல்லூரி காதலன், முதிர்ச்சி அடைந்த இளைஞன் என மூன்று விதமான பரிமாணங்களில் காட்டி நேர்மறையான விமர்சனத்தோடு வசூலையும் வாரி குவித்தது.

இதன் பின்னர் சிபி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து படம் இயக்குவதாக இருந்தது. கதை பிடிக்கவில்லை என்று கடைசி நேரத்தில் கழண்டு கொண்டார் சூப்பர் ஸ்டார்.

மீண்டும் சிவகார்த்திகேயனை வைத்து இயக்க உள்ள சிபி

இதனை அடுத்து சிபி, தெலுங்கு நடிகர் நானியை  வைத்து இயக்குவதாக இருந்த படமும் கைநழுவி போனதால் மீண்டும் சிவகார்த்திகேயன் மற்றும் சிபி கூட்டணி உறுதியாகியுள்ளது.

 ஏ ஆர் முருகதாஸ் சிவகார்த்திகேயனுடன் இணைந்துள்ள எஸ் கே 23 படத்தை அடுத்து, பாலிவுட் செல்ல இருப்பதால், எஸ் கே 23 படத்தை விரைவில் முடிக்க திட்டமிட்டு உள்ளார் ஏ ஆர் முருகதாஸ்.

இதனால் சிபி மற்றும் சிவகார்த்திகேயன் இணையும் எஸ் கே 24  படப்பிடிப்பு, இன்னும் சில மாதங்களில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்மூலம் சிவாவை புதுவித தோற்றத்தில் காணலாம் என்று தகவல் தெரிவித்து உள்ளார் இயக்குனர் சிபி.

மேலும் எஸ் கே 24 படத்தில் சிவகார்த்திகேயனின் ஜோடியாக அனிமல் படத்தின் மூலம் பாலிவுட் வரை சென்று வெற்றிக்கொடி நாட்டி உள்ள ராஷ்மிகா மந்தனாவை நடிக்க வைக்க பேசப்பட்டு வருகிறது.

Trending News