வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

கோட் படத்தை வைத்து ஸ்கெட்ச் போடும் எஸ் கே.. பக்கா தெளிவா காய் நகர்த்தும் ரஜினி முருகன்

சிவகார்த்திகேயன் ஏ ஆர் முருகதாஸ் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். ஏற்கனவே ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் அமரன் படத்தை முடித்து ஓரங்கட்டி விட்டார். இப்பொழுது அடுத்த படம் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க பிளான் பண்ணிக் கொண்டிருக்கிறார்.

ஆனால் சிவா அதற்கும் ஒரு செக் வைத்து வெங்கட் பிரபுவை பிரஷரில் தள்ளி விட்டுள்ளார். கோட் படம் ரிலீசுக்கு பிறகு தான் இது 100 சதவீதம் சாத்தியமாகும். வெங்கட் பிரபு தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் கோட் படம் ஓடாவிட்டால் இவர்கள் கூட்டணி ரத்தாகிவிடும் .

அதனால் கோட் படத்தின் வெற்றிதான் இவர்களின் அடுத்த படத்தை தீர்மானிக்கும். கோட் படம் ஓடவிட்டால் சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபுவை ஒதுக்கிவிட்டு, சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா கைவிட்ட புறநானூறு படத்தில் நடிக்க திட்டமிட்டு வருகிறார்.

பக்கா தெளிவா காய் நகர்த்தும் ரஜினி முருகன்

ஏற்கனவே சிவகார்த்திகேயனிடம் சுதா கொங்காரா ஒரு படத்துக்கு கால் சீட் பெற்றுள்ளார். கொம்பாளையா ஃபிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்க உள்ளது. எஸ் கே வின் அடுத்த படம் சுதா கொங்காராவா இல்லை வெங்கட் பிரபுவா என்பது இழுவையில்உள்ளது

இதற்கிடையில் புறநானூறு படம் வேண்டாம், வேறு ஒரு கதையை ரெடி பண்ணுங்கள் என சூர்யா சுதா கொங்காராவிடம் கேட்டிருக்கிறார். ஆனால் என்னுடைய கனவு படம் புறநானூறு நீங்கள் நடிக்க விட்டாலும் வேறு ஹீரோவை வைத்து அதை இயக்குவேன் என திட்டவட்டமாய் கூறிவிட்டாராம் சுதா.

Trending News