புதன்கிழமை, அக்டோபர் 30, 2024

சிவகார்த்திகேயன் அரசியல் வருகை.. விஜய்யை தொடரும் குட்டி தளபதி

கோவை – பாலக்காடு சாலை கோவைப்புதூர் பகுதியில் உள்ள கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது.  அதில் பல விஷயங்களை பேசினார்.

முக்கியமாக, ஆர்மி கதாபாத்திரத்தில் நடித்த பிறகு, அவருடைய குணத்தில் ஏற்பட்ட மாற்றங்களை பற்றி பகிர்ந்திருந்தார்.  அது ஒரு goosebump மொமெண்ட் ஆகவே இருந்தது.  அவர் பேசியதாவது, “காமெடி, கலாய்ப்பது என்பது கூடவே பிறந்து விட்டது என்றும், படபிடிப்பு சீரியசாக இருக்கும்போது நான் கொஞ்சம் தான் ஜாலியாக இருப்பேன் என்றும், இந்த படத்தில் நடிப்பதற்கு முன்னர் முதலில் மன ரீதியாக தன்னை தயார்படுத்தி கொண்டதாகவும், பின்னர் உடலை தயார் செய்தேன்”

மேலும் படப்பிடிப்பு நடக்கும்போது, முகுந்த் வேலை பார்த்த ஒவ்வொரு இடத்தையும் ஆராய்ச்சி செய்து அந்த இடத்தில் சென்று நடித்துள்ளாராம். உடல் ரீதியாக அதிக உழைப்பு போட்ட ஒரு படம் அமரன் என்றும் பெருமிதத்துடன் கூறி இருக்கிறார்

சிவகார்த்திகேயன் அரசியல் வருகை

இந்த நிலையில் செய்தியாளர்கள், சிவர்கார்த்திகேயனிடம் நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என்று கேட்டுள்ளார்கள்.  அதற்க்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், “சினிமாவில் நான் பண்ண வேண்டிய ரோல் அதிகம் உள்ளது. எனவே அரசியலுக்கு வருவதைப் பற்றி பின்னர் பார்ப்போம்” என்றார்.

இதை வைத்து பார்க்கும்போது, பல வெற்றி படங்களை கொடுத்த பின்னர் அவரும் விஜய் போல அரசியல் வருகை தர நிறைய வாய்ப்புள்ளது என்றே தோன்றுகிறது.  ஏற்கனவே துப்பாக்கியை கொடுத்து சினிமா வாரிசாக அறிவித்துவிட்டார்.

இதில் அரசியலில் கால் பதித்தாள் அரசியல் வாரிசாகவும் அறிவித்து விடுவார் போல.  நாளுக்கு நாள் சிவர்கார்த்திகேயன் மீது அன்பும் வெறுப்பும் அதிகரித்த வண்ணமாக இருக்கிறது.  இதுவே வளர்ச்சிக்கான ஒரு அறிகுறி

- Advertisement -spot_img

Trending News