வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அவரு கூப்பிட்டாருனு என் இமேஜை கெடுத்துக்க முடியாது.. ரஜினியுடன் நடிக்க மறுத்த சிவகார்த்திகேயன்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் ஒரு சீனிலாவது வந்துவிட மாட்டோமோ என பல நடிகர், நடிகைகள் ஏங்கி கொண்டிருக்கும் போது ரஜினியின் அடுத்த படத்தில் நடிக்க தன்னை தேடி வந்த வாய்ப்பை மறுத்து இருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயன் தன்னை ஒரு ரஜினி ரசிகர் என்று பல மேடைகளிலும் பெருமையாக கூறியிருக்கிறார். ஆரம்ப காலங்களில் மிமிக்கிரி செய்து கொண்டிருக்கும் போது அச்சு அசல் ரஜினியை போலவே பேசியும், நடித்தும் காட்டியிருக்கிறார்.

Also Read: பா ரஞ்சித்தை பாராட்டும் சாக்கில் ரஜினி செய்த தந்திரம்.. இது சாத்தியமா என குழப்பத்தில் கோலிவுட்

ரஜினி இப்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த படத்தில் நடிக்க தான் சிவகார்த்திகேயனுக்கு வாய்ப்பு வழங்கி இருக்கிறார் நெல்சன். ஆனால் சிவகார்த்திகேயன் தன்னால் நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம்.

இதற்கு காரணம் ஜெயிலர் படத்தில் உள்ள ஒரு நெகடிவ் கேரக்டர் பண்ணவே நெல்சன் சிவகார்த்திகேயனை அணுகி இருக்கிறார். ஆனால் சிவாவுக்கு நெகடிவ் கேரக்டர் பண்ண விருப்பம் இல்லையாம். ஹீரோ லைனிலிருந்து வில்லனுக்கு மாற சிவகார்த்திகேயன் இப்போது தயாராக இல்லை.

Also Read: ரஜினிக்கு வில்லனாகும் ஸ்டைலிஷ் நடிகர்.. 30 வருடங்களுக்குப் பிறகு இணையும் கூட்டணி

சிவகார்த்திகேயனும், நெல்சனும் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேலாக நண்பர்களாக இருக்கின்றனர். நெல்சன் விஜய் டிவியில் உதவி இயக்குனராக இருந்தவர். இவருடைய பயணம் கோலமாவு கோகிலாவில் ஆரம்பித்து இப்போது ரஜினியுடன் ஜெயிலரில் பயணித்து கொண்டிருக்கிறது.

சிவகார்த்திகேயன் பொதுவாகவே ஒரு சில கேரக்டர்கள், காட்சிகள் பண்ண கூடாது என்பதில் ரொம்ப உறுதியாக இருக்கிறார். மேலும் ஹீரோவிலிருந்து வில்லன் கேரக்டர் எல்லாம் ஒரு சிலருக்கே செட் ஆகும் என்பதில் சிவா தெளிவாக இருக்கிறார். இதேபோல் இருந்த சூர்யா விக்ரம் பட ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் மிரட்டி விட்டார். ஆனால் ரஜினியை பார்த்து வளர்ந்த சிவகார்த்திகேயனுக்கு இதுபோன்ற வாய்ப்பு கிடைப்பது கஷ்டம்தான்.

Also Read: ஜெய்யை தூக்கிவிட உதவும் ஜெயிலர்.. தலைவர் ராசியால் அடுத்தடுத்து குவியும் பட வாய்ப்பு

Trending News