ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

இமான் கொளுத்தி போட்டதுக்கு ஒரே பதிவில், பதில் கொடுத்த எஸ்கே.. பெருமூச்சு விட்ட ரசிகர்கள்

Sivakarthikeyan-D. Imman: சிவகார்த்திகேயன் நடித்த மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், நம்ம வீட்டுப்பிள்ளை, சீமராஜா உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தவர் தான் டி இமான். இவ்வாறு சிவகார்த்திகேயன் திரை உலகில் அறிமுகமான முதல் படத்திலிருந்து பல ஹிட் பாடல்களை கொடுத்து அவரை தூக்கிவிட்டவர் டி இமான்.

ஆனால் இவர் இப்போது சிவகார்த்திகேயனுக்கு எதிராக அளித்திருக்கும் பேட்டி பெரும் சர்ச்சையை கிளப்பியது. ‘சிவகார்த்திகேயன் எனக்கு துரோகம் செய்துவிட்டார். இந்த ஜென்மத்தில் அவருடன் இணைந்த படம் பண்ண மாட்டேன். அவர் செய்த துரோகம் என்ன என்பதை வெளிப்படையாக சொன்னால் குழந்தைகள் எதிர்காலம் பாதிக்கப்படும்’ என பொடி வைத்துப் பேசினார்.

இதனால் சிவகார்த்திகேயனின் கேரக்டரை சோசியல் மீடியாவில் கிழித்து தொங்க விட்டனர். ஏனென்றால் டி இமானின் முதல் மனைவிக்கும் சிவகார்த்திகேயனுக்கும் தொடர்பு இருந்திருக்குமோ, அதனால் தான் டி இமான் அவருடைய முதல் மனைவியை விவாகரத்து செய்தாரா என்று ஏகப்பட்ட சர்ச்சைகள் கிளம்பியது.

Also read: அட்ஜஸ்ட்மென்ட்-க்கு மறுத்ததால் 5 வருடமா மார்க்கெட்டை இழந்த SK பட நடிகை.. புதுசா ரீ என்ட்ரி கை கொடுக்குமா?

ஆனால் இதற்கெல்லாம் சிவகார்த்திகேயன் எதுவும் சொல்லாமல் அமைதி காக்கிறார். நீங்க எவ்வளவுதான் கொளுத்தி போட்டாலும் நான் என்னுடைய குடும்பத்தோட சந்தோசமா ஜாலியா இருக்கேன் என வெளிப்படுத்தும் விதமாக இப்போது சிவகார்த்திகேயன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்.

இதில் அவருடைய மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். சிவகார்த்திகேயனின் மகன் மற்றும் மகள் இருவரும் நன்றாக வளர்ந்து விட்டார்களே! என ரசிகர்களும் இந்த புகைப்படத்தை பார்த்து கமெண்ட் செய்கின்றனர். மேலும் சிவகார்த்திகேயன் இப்போது மாவீரன் படத்திற்கு பிறகு அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் எஸ்கே 21 படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை கமலஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் நடைபெற்று வரும் நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடக்கிறது. இதில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த புகைப்படத்தில் இவருடைய ஹேர் ஸ்டைலை பார்க்கும்போது ஆர்மி மேன் போல் தெரிகிறார். மேலும் சிவகார்த்திகேயனின் அயலான் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது.

குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட சிவகார்த்திகேயன்

sk-family
sk-family

Also read: சிவகார்த்திகேயன் இனி எந்திரிக்கவே கூடாது.. தனுஷ் போட்ட புதுக்கணக்கு

Trending News