வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பிரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயனின் சம்பளம்.. 26 நாட்களுக்கு இத்தனை கோடியா?

சிவகார்த்திகேயன் தற்போது விஜய், அஜித் போன்ற நடிகர்களுக்கு இணையான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார். நடிகர்கள் ஒரு ஹிட் படம் கொடுத்தாலே தனது சம்பளத்தை உயர்த்திவிடுவார்கள். சிவகார்த்திகேயன் தொடர்ந்து டாக்டர், டான் என 100 கோடி வசூல் படங்களை தந்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் பிரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயனின் சம்பளத்தை அறிந்த கோலிவுட் வாயையை பிளந்துள்ளது. சிவகார்த்திகேயன் தற்போது அனுதீப் இயக்கத்தில் பிரின்ஸ் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வருகிறது.

இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் சத்யராஜும் நடித்துள்ளார். மேலும் உக்ரேன் நாட்டு மாடல் அழகி கதாநாயகியாக நடித்துள்ளார். அதாவது படத்தின் கதை சுற்றுலாவை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இதில் மொழி தெரியாத வெளிநாட்டு பெண்ணுக்கு சிவகார்த்திகேயன் ஊரை சுற்றி காண்பிக்கிறார்.

அப்போது இவர்களுக்கிடையே ஏற்படும் காதல் கதை தான் பிரின்ஸ் படத்தின் கதை. இதனால்தான் இப்படத்திற்கு வெளிநாட்டிலிருந்து ஹீரோயின் தேர்வு செய்துள்ளனர். இந்தப் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலீசாக உள்ளது.

பிரின்ஸ் படத்தை மொத்தமாக 47 நாட்களில் படக்குழு எடுத்து முடித்துள்ளனர். அதில் சிவகார்த்திகேயன் 26 நாட்கள் கால்சீட் கொடுத்துள்ளார். கரெக்டாக அந்த நாட்களில் வந்து தனது படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து கொடுத்துள்ளார் சிவகார்த்திகேயன்.

இதில் ஒரு நாளைக்கு 90 லட்சம் என 26 நாட்களுக்கு 23 கோடி சம்பளமாக சிவகார்த்திகேயன் பெற்றுள்ளார். இதைக் கேள்விப்பட்ட கோலிவுட் ரசிகர்கள் 26 நாட்களுக்கு 23 கோடியா என  அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தற்போது உள்ள டாப் நடிகர்களே இவ்வளவு சம்பளம் வாங்குவார்கள் என்பது சந்தேகம்தான்.

Trending News