சிவகார்த்திகேயன் தன்னுடைய குடும்ப புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். அதில் தன்னுடைய மகனுடன் எடுத்த போட்டோவையும் பகிர்ந்து இருந்தார். சிவா இப்போது தான் முதன் முறையாக அவருடைய மகனின் முகம் தெரியும் போட்டோவை சோசியல் மீடியாவில் ஷேர் செய்து இருக்கிறார்.
நடிகர் சிவகார்த்திகேயன்-ஆர்த்தி தம்பதியினருக்கு கடந்த ஜூலை மாதம் 2021 ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. சிவகார்த்திகேயனின் அப்பா நினைவாக தன்னுடைய மகனுக்கு குகன் தாஸ் என்று பெயர் வைத்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஆராதனா என்ற மகளும் உள்ளார்.
Also Read:ஜாதியை பார்க்கும் சிவகார்த்திகேயன்.. வலையில் சிக்கிய அதிதி ஷங்கர்
சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் இருக்கும் போதே தன்னுடைய மாமாவின் மகளான ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் கடந்த 2010 ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.
2013 ஆண்டு அக்டோபர் மாதம் ஆராதனா என்னும் பெண் குழந்தை பிறந்தது. ஆராதனா சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான கனா திரைப்படத்தில் ‘வாயாடி பெத்த புள்ள’ என்னும் பாடலை பாடி பிரபலம் அடைந்தார். சமீபத்தில் நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியின் போது தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடினார்.
ஜூலை மாதம் குழந்தை பிறந்த நிலையில், ஆகஸ்ட் 2021 அன்று சிவகார்த்திகேயன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு மகன் பிறந்திருப்பதை அறிவித்தார். அந்த பதிவில் “18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக…என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த்துளிகளால் நன்றி🙏 அம்மாவும் குழந்தையும் நலம்” என்று பதிவிட்டிருந்தார்.

இப்போது சிவகார்த்திகேயன் அவருடைய மகனின் புகைப்படத்தை பதிவிட்டிருந்த நிலையில், இப்போது அந்த புகைப்படங்கள் பயங்கரமாக வைரலாகி கொண்டிருக்கிறது.
Also Read: மொத்த கடனையும் அடைக்கும் நேரம் வந்தாச்சு.. பெரிய முதலைகள் கையில் சிக்கிய சிவகார்த்திகேயன்