Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் இப்போது சினிமாவில் படு பிஸியாக இருந்து கொண்டிருக்கிறார். கமலின் ராஜ் கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படம் உருவாகி இருக்கிறது. இந்த படம் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆக உள்ளது.
இதற்கு அடுத்தபடியாக ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஆண் குழந்தை பிறந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் குதூகலத்தை ஏற்படுத்தி இருந்தது.
இயக்குனர் ரவிக்குமாருடன் சிவகார்த்திகேயன்
மேலும் தனது இரண்டாவது மகனின் பெயர் சூட்டு விழாவை மிகப் பிரம்மாண்டமாக சிவகார்த்திகேயன் நடத்தி இருந்தார். அந்தப் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாக பரவியது. சிவகார்த்திகேயன் மற்றும் ஆர்த்தி தம்பதியினருக்கு ஆராதனா மற்றும் குகன் என்ற குழந்தைகள் உள்ள நிலையில் மூன்றாவது பிள்ளைக்கு பவன் என்ற பெயர் சூட்டி இருந்தனர்.
இந்நிலையில் தனது இரண்டாவது மகன் பவனுடன் சிவகார்த்திகேயன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அவரது அருகில் அயலான் பட இயக்குனர் ரவிக்குமாரும் தனது மகளுடன் இருக்கிறார்.
குகனை உரித்து வைத்திருக்கும் பவன்
இந்தப் புகைப்படங்கள் தான் இப்போது வைரலாகி கொண்டிருக்கிறது. மேலும் இது அயலான் பார்ட் 2 படத்திற்கான கதை டிஸ்கஷனா, இல்லை சாதாரண குடும்ப சந்திப்பா என பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும் அந்தப் புகைப்படத்தில் குகனை அப்படியே அவரது தம்பி பவன் உரித்து வைத்திருக்கிறார் என்ற கமெண்ட் வருகிறது.
மாஸ் காட்டபோகும் சிவகார்த்திகேயன்
- பொறாமை தீயில் பொசுங்கிய சிவகார்த்திகேயன்
- சூர்யாவை ஓவர் டேக் செய்து விஜய் இடத்தை பிடிக்கும் சிவகார்த்திகேயன்
- முரண்டு பிடித்த சூர்யா, வாய்ப்பை தட்டி தூக்கிய சிவகார்த்திகேயன்