Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

பராசக்தி டைட்டிலை யாருமே பயன்படுத்த கூடாது.. சிவகார்த்திகேயனுக்கு மீண்டும் எழுந்த நெருக்கடி!

பராசக்தி டைட்டிலை யாருமே பயன்படுத்த கூடாது.. சிவகார்த்திகேயனுக்கு மீண்டும் எழுந்த நெருக்கடி!

Parasakthi: ஒரு ஹீரோ வளர்ந்து வருகிறார் என்பதற்கான முதற்கட்ட சான்று தான் அவருடைய படத்துக்கு நெருக்கடி வருவது. அந்த விஷயத்தில் சிவகார்த்திகேயன் வளர்ந்து வருகிறார் என்பது பராசக்தி டைட்டில் மூலமே தெரிந்து விட்டது. சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், […]

Parasakthi: ஒரு ஹீரோ வளர்ந்து வருகிறார் என்பதற்கான முதற்கட்ட சான்று தான் அவருடைய படத்துக்கு நெருக்கடி வருவது.

அந்த விஷயத்தில் சிவகார்த்திகேயன் வளர்ந்து வருகிறார் என்பது பராசக்தி டைட்டில் மூலமே தெரிந்து விட்டது.

சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா முரளி ஸ்ரீ லீலா இணைந்து நடித்துக் கொண்டிருக்கும் படம் தான் பராசக்தி.

இந்த படத்தின் டைட்டில் டீசர் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியானது. முதலில் இந்த டைட்டில் இருக்கு பிரச்சனை பண்ணியது விஜய் ஆண்டனி தான்.

அவர் நடித்துக் கொண்டிருக்கும் படத்தின் தெலுங்கு வர்ஷனுக்கு பராசக்தி என ஏற்கனவே டைட்டில் வைத்து விட்டதாக அறிவித்திருந்தார்.

பின்னர் சிவகார்த்திகேயனின் பட தயாரிப்பாளர் மற்றும் விஜய் ஆண்டனிக்கு இடையே சமரச பேச்சுவார்த்தை நடந்து முடிந்தது.

மீண்டும் எழுந்த நெருக்கடி!

இனி இந்த டைட்டிலுக்கு பிரச்சனை இல்லை என செய்திகளும் வெளியாகிறது. மேலும் பராசக்தி டைட்டிலை சிவகார்த்திகேயன் படத்திற்கு கொடுத்துவிட்டதாக ஏவிஎம் நிறுவனமும் அறிவித்துவிட்டது.

இந்த நிலையில் தான் புதிய பூகம்பம் எழுந்திருக்கிறது. அதாவது பராசக்தி படத்தை தயாரித்தது நேஷனல் பிலிம்ஸ் என்னும் தயாரிப்பு நிறுவனம்.

ஏவிஎம் நிறுவனம் இந்த படத்தை ஒரு சில ஏரியாக்களில் விநியோகஸ்தம் மட்டுமே செய்ததாம் நேஷனல் ஃபிலிம்ஸ் உரிமையாளர் பெருமாள் முதலியார்.

தற்போது பிரச்சனை பண்ணி இருப்பது அவருடைய பேரன் தான். ஏவிஎம் நிறுவனம் முதலில் சிவாஜியை ஹீரோவாக நடிக்க வைக்க விரும்பவே இல்லை.

என்னுடைய தாத்தா தான் சிவாஜிக்கு வாய்ப்பு கொடுத்தது. இதனால் தான் வருடா வருடம் பொங்கலுக்கு சிவாஜி என் தாத்தாவை நேரில் வந்து சந்தித்து விட்டு செல்வார்.

பராசக்தி படம் உண்மையிலேயே பொக்கிஷமாக காக்க வேண்டிய ஒன்று. இந்த டைட்டிலை யாருமே பயன்படுத்தக்கூடாது என அறிவித்து இருக்கிறார்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.