வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

வெளிவந்தது சிவகார்த்திகேயனின் தெலுங்கு பட கதை.. கூடவே இருந்து குழி பறித்த துரோகி

சிவகார்த்திகேயன் தற்போது நேரடி தெலுங்கு திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் தன் முத்திரையை பதிக்க இருக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு இருமொழிகளில் உருவாகும் அவருடைய 20வது திரைப்படத்தை அனுதீப் இயக்குகிறார். தமன் இப்படத்திற்கு இசை அமைக்கிறார்.

கடந்த மாதம் பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காரைக்கால் சுற்றியுள்ள பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டை சேர்ந்த பிரபல நடிகை நடித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் கதை என்ன என்பது பற்றிய ஒரு தகவல் கசிந்துள்ளது. அதாவது இந்தப் படத்தில் பிரேம்ஜி, சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அதில் பிரேம்ஜி சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இப்படத்தில் நடிக்கிறார்.

இதை கேள்விப்பட்ட அனைவரும் தற்போது பிரேம்ஜியை பயங்கரமாக கலாய்த்து வருகின்றனர். ஏனென்றால் இதுவரை நாம் அவரை திரைப்படங்களில் ஒரு காமெடியனாக தான் பார்த்திருக்கிறோம். அப்படிப்பட்ட அவர் திடீரென வில்லன் அவதாரம் எடுத்து இருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அவருக்கு இவர் வில்லனா என்று கேட்டு பலரும் கலாய்கின்றனர். மேலும் பிரேம்ஜி வில்லனாக நடிப்பதைப் பார்த்து அவரது அண்ணன் வெங்கட்பிரபு முதல் அவருடைய நண்பர்கள் வரை அனைவரும் தற்போது மிகுந்த ஆச்சரியத்தில் தான் இருக்கிறார்களாம்.

மேலும் பிரேம்ஜி இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு நெருங்கிய நண்பராக வருவார். கடைசியில்தான் பிரேம்ஜி தனக்கு துரோகம் செய்கிறார் என்று சிவாவிற்கு தெரியவரும். அதன்பின் பிரேம்ஜி தன்னுடைய வில்லத்தனமான நடிப்பை காட்டுவார் பின்னர் நடப்பது தான் மீதி கதை.

இதுதான் படத்தின் ஒன் லைன் ஸ்டோரி. வைத்துப் பார்க்கும்போது அந்த வெளிநாட்டு ஹீரோயினை தான் இருவரும் காதலிப்பார்கள் என்று தோன்றுகிறது. எதுவாக இருந்தாலும் படம் வெளிவந்த பிறகு பிரேம்ஜியின் வில்லத்தனம் எப்படி இருக்கிறது என்று தெரிந்து விடும்.

Trending News