புதன்கிழமை, ஜனவரி 8, 2025

சிவகார்த்திகேயன் நெகட்டிவ் இமேஜை போக்க வந்த கடவுள்.. மக்கள் வெறுத்ததால் நம்ம வீட்டுக்கு பிள்ளை போடும் பிளான்

சிவகார்த்திகேயன் அமரன் படத்தை முடித்து ஓரங்கட்டி விட்டார். அடுத்தபடியாக ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்துக்கு பின்னர் இளம் இயக்குனர் ஒருவருடன் கூட்டணி வைக்கிறார். சமீபத்தில் அவருடன் தான் சிவகார்த்திகேயனை நிறைய இடத்தில் பார்க்க முடிகிறது.

சிவகார்த்திகேயன் இமேஜ் சமீபத்தில் ரொம்பவே டேமேஜ் ஆகிவிட்டது. அதனால் அவருக்கு மக்கள் மத்தியில் இருந்த நல்ல பெயர் கெட்டுப் போனது. இப்பொழுது அந்த பெயரை எப்படியாவது மீட்டெடுக்க வேண்டும் என பக்காவா பிளான் போட்டு வருகிறார் எஸ் கே.

குட் நைட் பட இயக்குனர் விநாயகர் சந்திரசேகர உடன் தான் அடுத்த படம் கமிட் ஆகியுள்ளார். அவரிடம் எஸ் கே எப்படியாவது என் பெயரைக் காப்பாற்றுங்கள். சமீபத்தில் சமூக வலைதளங்களில் எனக்கு நிறைய கெட்ட பெயர் வந்துள்ளது, அதனை மீட்டெடுத்தால் தான் சினிமாவில் என் கேரியர் நிலைக்கும் எனக் கதறியுள்ளார்.

மக்கள் வெறுத்ததால் நம்ம வீட்டுக்கு பிள்ளை போடும் பிளான்

அதுமட்டுமின்றி எஸ் கே, மீண்டும் நான் நம்ம வீட்டுப் பிள்ளையாக மக்கள் மத்தியில் வலம் வர வேண்டும் என கூறியிருக்கிறார். இப்பொழுது விநாயக் சந்திரசேகர் ,சிவகார்த்திகேயனை தூக்கி நிறுத்தும் கதையை எழுதிக் கொண்டிருக்கிறார். மறுபடியும் அவரது கேரியரில் டர்னிங் பாயிண்ட்டை கொண்டுவரும் முனைப்பில் இறங்கி இருக்கிறார் இந்த புது முக இயக்குனர்.

ஏற்கனவே எஸ்.கே.விடம் இவர் ஒரு ஒன்லைன் ஸ்டோரி சொல்லி இருக்கிறார். அது பிடித்துப் போகவே அதை மேற்கொண்டு தனக்கு நல்ல பெயர் கிடைக்குமாறு டெவலப் பண்ண சொல்லி இருக்கிறார். இதனால் அடுத்த படம் சிவகார்த்திகேயன் பெயரை காப்பாற்றும் விதமாக செதுக்கி வருகிறார் குட் நைட் புகழ் இயக்குனர்.

Trending News