சினிமா செய்திகள்

அச்சம் என்பது மடமையடா.. சம்பவம் பெருசா இருக்கும் போலயே, பராசக்தி டைட்டில் டீசர் எப்படி இருக்கு.?

By · 29 ஜன 2025 · Updated 08 மார்ச் 2026
parasakthi

Parashakthi: சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா இணைந்துள்ள பராசக்தி டைட்டில் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே இந்த டைட்டில் தான் என்பது அனைவருக்கும் தெரிந்து விட்டது.

இருந்தாலும் தற்போது வெளியாகி இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. அதன்படி நாயகர்கள் மூவருமே 60 காலகட்ட கெட்டப்பில் இருக்கின்றனர்.

படமும் அப்போது நடந்த ஒரு பிரச்சினையை பற்றி தான் பேசுகிறது. இதில் கல்லூரி மாணவர்கள் அனைவரும் போராட்டத்தில் குதிக்க அவர்களுக்கு தலைமையாக சிவகார்த்திகேயன் இருக்கிறார்.

பராசக்தி டைட்டில் டீசர் எப்படி இருக்கு.?

இதில் அதர்வாவின் கதாபாத்திரமும் முக்கியமானது என்பதும் தெரிகிறது. அதை தாண்டி ரவி மோகன் கையில் துப்பாக்கியுடன் இருப்பதை பார்க்கும் போதே வில்லன் என புரிகிறது.

இறுதியில் பெரும் சேனை ஒன்று தேவை என சிவகார்த்திகேயன் முழக்கம் இடுகிறார். இயல்பாகவே மாணவர் சக்தி பெரியது.

அதை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படம் நிச்சயம் வெற்றி பெறும் என இப்போதே வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.