Sivakarthikeyan: அடுத்த வருட தொடக்கமே அமர்க்களமாக தான் இருக்கப் போகிறது. ஏனென்றால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் கடைசி படமாக ஜனநாயகன். ஜனவரி 9ம் தேதி வெளியாகிறது.
அதே பொங்கலுக்கு தான் சிவகார்த்திகேயன் நடித்துவரும் பராசக்தி படமும் வெளியாக இருக்கிறது. இப்படத்தை வெளியிடுவது உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம்.
இதிலிருந்தே பின்னணி காரணம் என்ன என்பதை சொல்லி தெரிய வேண்டியது இல்லை. ஆனால் சிவகார்த்திகேயன் இந்த பிரச்சனையில் குளிர் காய்கிறாரோ என்ற சந்தேகம் விஜய் ரசிகர்களுக்கு இருக்கிறது.
அதை உறுதிப்படுத்தும் வகையில் வலைப்பேச்சு பிஸ்மி SK ஒரு சந்தர்ப்பவாதி. தன்னுடைய சுயநலத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார் என கூறியுள்ளார்.
சிவகார்த்திகேயன் ஒரு சந்தர்ப்பவாதி
அதேபோல் ஆளும் கட்சி, விஜய்யின் கட்சி இருதரப்புக்கும் தான் தற்போது அரசியல் போட்டி நிலவுகிறது. அதுதான் பட ரிலீசில் எதிரொலிக்கிறது.
அந்தப் பஞ்சாயத்தின் மூலம் தன்னுடைய படம் அதிக வசூலை பார்த்தால் தனக்கு அது லாபம் தான். எப்படியும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் பராசக்திக்கு தான் அதிக தியேட்டர்களை ஒதுக்குவார்கள்.
அப்படி என்றால் முதல் நாள் கலெக்ஷனில் ஜனநாயகன் நிச்சயம் டல் அடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அதை சிவகார்த்திகேயன் பயன்படுத்திக்கொள்ள பார்க்கிறார் என்ற ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.
ஆனால் எப்போதுமே விஜய் தான் ஆட்டநாயகன். ஜனநாயகன் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என விஜய் ரசிகர்கள் தொடர்ந்து கூறி வருவது குறிப்பிடத்தக்கது.