திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

வாலைச்சுருட்டி கொண்டு கப்சிப் ஆன சிவகார்த்திகேயன்.. இதுவரை வாங்குன அடி போதும்டா சாமி

Sivakarthikeyan was calmed down by the actions of the production houses: திரையரங்குகளில் வாராவாரம் படங்கள் ரிலீஸ் ஆனாலும் ஒரு சில படங்களே வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்று மக்கள் நெஞ்சை கொள்ளை கொண்டு நிலைத்த இடத்தை பெறுகின்றன. சினிமா துறையை பொறுத்தவரை வரவு செலவு என்பது புரியாத புதிர் தான். தயாரிப்பாளர்களுக்கு ஒரு சில படங்கள் கை கொடுத்த போதும் பல படங்கள் தோல்வியை தழுவி அதள பாதாளத்திற்கு கொண்டு விடுகின்றன. 

படங்களின் வெற்றி என்பது கணிக்க முடியாத ஒன்றாகி விடுகிறது. சிறிய பட்ஜெட்டில் சிறந்தகதை அம்சத்துடன் வரும் படங்கள் எதிர்பாராத அளவு மாபெரும் வெற்றி பெற்று விடுகிறது. ஆனால் அதில் நடித்த நடிகர் நடிகைகளோ ஜெட் வேகத்தில் தனது சம்பளத்தை உயர்த்தி தயாரிப்பாளர்களுக்கு செக் வைத்து விடுகின்றனர். 

இன்றைய சூழலில் முன்னணி ஹீரோக்கள், பிரம்மாண்ட பட்ஜெட் படங்கள், காதை பிளக்கும் ஆக்சன் காட்சிகள் என மசாலா படங்களுக்கே வரவேற்பு அதிகமாக உள்ளது. படத்தின் பட்ஜெட்டில் பெரும் பகுதி நடிகர், நடிகைகளுக்கும், இயக்குனருக்குமே போய்விடுவதால் தயாரிப்பாளர்கள் சொற்ப லாபமே அடைகின்றனர். 

Also read: தென்னிந்திய டாப் 10 ஹீரோக்களின் மொத்த வசூல்.. புஷ்பாவிற்கு ஆப்பு வச்ச மாஸ்டர்

முன்னணியில் இருக்கும் நடிகர்  நடிகைகள் போட்டி போட்டு சம்பளத்தை உயர்த்த நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பது போல் இயக்குனர்களும் சம்பளத்தை உயர்த்தி கெத்து காட்டுகின்றனர். இதனால் பெரிய பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் கூட கதி கலங்கி போய்விடுகிறது. வளர்ந்து வரும் நடிகர்கள் 50 கோடி முதல் 70 கோடி என டிமாண்ட் வைக்க தயாரிப்பாளர்களுக்கு லாபமே இல்லாமல் போய்விடுகிறது. 

திரையரங்குகளுக்கு  விற்றது போக ஓடிடியில் காசு பார்க்கலாம் என்றாலோ, அதுவும் படங்களை குறைந்த விலைக்கு கேட்டு தயாரிப்பாளர்கள் தலையில் துண்டை போடுகிறது. உதாரணமாக மகிழ்ந்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்திற்காக 150 கோடி சம்பளமாக பெற்றுள்ளார். படத்தை ஓடிடிக்கு விற்று அதை சம்பளமாக அஜித்திற்கு கொடுத்துள்ளனர். 

விவேகம், விசுவாசம் போன்ற படங்களை போல் சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் மீண்டும் அஜித்தை வைத்து படம் தயாரிக்க ஆசைப்பட, அவர் இதே போல் அதிக சம்பளம் கேட்டதாக தெரிகிறது. இதனால் கடுப்பாகிய தயாரிப்பு நிறுவனம் ஒரு பெரிய கும்பிடை போட்டு வழி அனுப்பியது. அடுத்ததாக தனுஷும் இதே போல் டிமெண்ட் வைப்பதால் அவரை  வெயிட்டிங்கில் வைத்து அடுத்த வாய்ப்பை சிவகார்த்திகேயனுக்கு கொடுத்தாக தெரிகிறது. மேற்கண்ட காரணங்களாலும் தானும் ஒரு தயாரிப்பாளராக இருந்து பட்ட அவதியினாலும் வாய் திறவாமல் கப்சிப் என்று இருக்கிறார் சிவகார்த்திகேயன்

Also read: கமல், பாக்கியராஜ் செய்த தில்லாலங்கடி வேலை.. வசமாக சிக்கிக்கொண்ட சிவகார்த்திகேயன்

Trending News