வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

ரஜினியை முந்திய சிவகார்த்திகேயன்.. இப்படி ஒரு வசூல் சாதனையா? வியப்பில் கோலிவுட்

அமரன் படம் வெளியான 11 நாட்களில் ரூ.250 கோடி வசூலை நெருங்கியுள்ளது தமிழ் சினிமா வட்டாரத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் நாட்டைத் தாண்டி, விஜய், சூர்யா, அஜித் ஆகியோருக்குத்தான் வெளி மாநிலங்களில் குறிப்பாக ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் நல்ல வரவேற்பும் வசூலும் இருக்கும் நிலையில் இந்தப் பட்டியலில் சிவகார்த்திகேயனும் இடம்பிடித்துள்ளார்.

240 கோடி வசூலித்த அமரன் படம்

உலகம் முழுவதும் 240 கோடிக்கு மேல் வசூலித்துள்ள சிவகார்த்திகேயனின் அமரன் படம் தான் ஆந்திரம் மற்றும் தெலுங்கானாவில் வெளியான தமிழ் படங்களில் வசூலில் நம்பர் 1 இடத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதன்படி, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவீல் முதல் 5 இடத்தில் உள்ள சமீபத்தில் வெளியான தமிழ் படங்களின் லிஸ்ட் இதோ.

ஆந்திரா, தெலுங்கானாவில் வசூல் குவித்த டாப் 5 தமிழ் படங்கள்:

கமல்- ஷங்கர் கூட்டணியில் வெளியான இந்தியன் 2 படம் இந்தியாவில் 80.1 கோடி மட்டுமே வசூலித்து கலவையான விமர்சனங்கள் பெற்றது. இப்படம் உலகளவில் ரூ.150 கோடி மட்டுமே வசூலித்த நிலையில் இப்படம் 2 வது இடம் பிடித்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், அமிதாப்பச்சன், பகத்சாசில், ராணா, மஞ்சுவாரியர் ஆகியோர் நடிப்பில், த.செ.ஞானவேல் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி வெளியான படம் வேட்டையன். ஜெயிலர் படத்துக்குப் பின் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம் ரூ.232 கோடி வரைதான் வசூலித்ததாக கூறப்படும் நிலையில், இப்படம் 3 வது இடத்தில் உள்ளது.

விஜய் சேதுபதி, அனுரக் காஷ்யப், மம்தா மோகன் தஸ் ஆகியோர் நடிப்பில், நிதிலன் சுவாமி நாதன் இயக்கத்தில் கடந்த ஜீன் 14 ஆம் தேதி வெளியான படம் மகாராஜா. இப்படத்தை சுதஜ் சுந்தரம், ஜெகதீஸ் பழனிசாமி தயாரித்திருந்தனர். இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தெலுங்கு மார்க்கெட்டில் 14.61 கோடி வசூலீட்டி 4 வது இடம் பிடித்துள்ளது.

தனுஷ் நடித்து, இயக்கிய இப்படத்தில் அவருடன் இணைந்து பிரகாஷ்ராஜ் செல்வராகவன், வரலட்சுமி சரத்குமார், காளிதாஸ் ஜெயரம், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் ஜூலை 26 ஆம் தேதி வெளியான இப்படம் வெளியான 5 நாட்களில் 100 கோடி வசூலித்தது. வெளியான் 22 நாட்களில் உலகளவில் 155 கோடி வசூலித்து இப்படம் 5வது இடத்தில் உள்ளது.

சிவாவின் மார்க்கெட்

இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் கேரியரில் ஒரு பெரிய ஹிட் படமாக அமரன் படம் அமைந்துள்ள நிலையில் இப்படம் மூலம் வசூல், சம்பள உயர்வு ஆகியவறை அதிகரித்துள்ளதுடன், தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலத்திலும் சிவாவின் மார்க்கெட் அதிகரித்துள்ளது. அவருக்கான ஓபனிங்கு அதிகரித்துள்ளது. இதற்கு ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Trending News