புதன்கிழமை, ஜனவரி 15, 2025

வாரிசு பட வசூலை முறியடித்த மாவீரன்.. இரண்டு நாளில் தெறிக்க விட்ட சிவகார்த்திகேயன்

Varisu-Maaveeran: சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் பட தோல்விக்கு பிறகு, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம் தான் மாவீரன். தற்போது திரையில் ரிலீஸ் ஆகி பட்டைய கிளம்பி வரும் இப்பட கலெக்ஷன், விஜய் படத்தை முறியடித்த சம்பவம் குறித்த தகவலை இங்கு காண்போம்.

படும் தோல்வியை சந்தித்த படத்திற்கு பிறகு கம் பேக் கொடுக்கும் விதமாய், மிகுந்த வரவேற்பு கொண்டு வந்த படம் தான் மாவீரன். இப்படத்தில் ஆதிதிசங்கர், சிவகார்த்திகேயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

Also Read: நடிகையின் உதட்டை கடித்ததால் ஃபேமஸான 6 நடிகர்கள்.. அட நம்ம மாமன்னன் வடிவேலு இதுல இருக்காரா

குரங்கு பொம்மை, மண்டேலா பட இயக்குனரான மடோன் அஸ்வின் இயக்கி உள்ளார். ஸ்லம் ஏரியாவில் குடியிருக்கும் சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை வெளிகாட்டும் படமாய் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. மேலும் இப்படத்தில் யோகி பாபுவின் காமெடி, படத்திற்கு கூடுதல் சிறப்பாய் அமைந்திருக்கிறது.

பக்கா பேமிலி சப்ஜெக்ட் படமாக அமைந்துள்ள இப்படம், தற்போது வரை கலெக்ஷனில் வெளுத்து வாங்கி வருகிறது. தமிழ்நாட்டில், மாவீரன் படத்திற்கான முதல் நாள் வசூல் சுமார் 7.61 கோடி. மேலும் இரண்டாம் நாள் வசூல் 9.37 கோடி என வசூலில் ஏற்றம் கண்டு வருகிறது.

Also Read: கிசுகிசுவில் சிக்காத ஒரே நடிகர்.. டீடோட்லராக வாழ்ந்த விஜய் சேதுபதி பட சிரிப்பு வில்லன்

இதை ஒப்பிடுகையில், விஜய் நடிப்பில் பேமிலி என்டர்டைன்மென்ட் படமாய் வெளிவந்த வாரிசு படத்தின் இரண்டாம் நாள் கலெக்ஷன் 8.75 கோடி என கூறப்படுகிறது. அவ்வாறு இரண்டாம் நாள் கலெக்ஷனில் வாரிசு படத்தை விட மாவீரன் முன்னிலையில் இருந்து வருகிறது.

பொன்னின் செல்வன், துணிவு படத்திற்குப் பிறகு தற்பொழுது வாரிசு பாடத்தை பின்தள்ளி மாவீரன் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. இதை பார்க்கையில், இனி வரும் நாட்களில் வாரிசு பட பாக்ஸ் ஆபிஸ் வசூலை முறியடிக்க வாய்ப்புள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் இடையே பேசப்பட்டு வருகிறது.

Also Read: உதயநிதியை ஏமாற்றிய ஆர்யா.. நம்பி மோசம் போன ரெட் ஜெயண்ட்

Trending News