திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

புகழ் போதையில் நன்றி மறந்து சிவகார்த்திகேயன்.. தம்பி பிரதீப் பார்த்து கத்துக்கோங்க ப்ரோ!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் ஒரு மாஸ் ஹீரோவாக வருவது சாதாரண விஷயம் இல்லை. இதற்காக சிவகார்த்திகேயன் நிறைய கடின உழைப்பை போட்டிருப்பார். தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வந்த சிவகார்த்திகேயனுக்கு பிரின்ஸ் படம் சருக்களை தந்தது.

இந்நிலையில் யாரும் சற்றும் எதிர்பார்க்காத வண்ணம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட வருகிறது. ஓவர் நைட்டில் ஃபேமஸ் ஆன பிரதீப்புக்கு தற்போது ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களும், பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது.

Also Read : சம்பாதிக்க புது ரூட்டை கண்டுபிடித்த விஜய், சிவகார்த்திகேயன்.. சத்தமில்லாமல் வச்சாங்க பாரு பெரிய ஆப்பு!

ஆனால் சிவகார்த்திகேயன் போல் இவர் போதையில் நன்றியை மறக்கவில்லை என சினிமா விமர்சகர் அந்தணன் ஒரு ஊடகத்திற்கு பேட்டி கொடுத்துள்ளார். அதாவது சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் கஷ்டப்பட்டபோது அவருக்கு பிரபலம் ஒருவர் பட வாய்ப்பு கொடுத்தார்.

தொடர்ந்து மூன்று படங்கள் நாமே பண்ணலாம் என்று அக்ரிமெண்ட் போடப்பட்டது. சிவகார்த்திகேயனின் முதல் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றவுடன் அடுத்த படம் இந்த தயாரிப்பில் நடிக்க முடியாது என்று மெத்தனமாக சொன்னாராம். மேலும் அடுத்தஅடுத்த இதனால் பெரிய பிரச்சனையே வெடித்தது.

Also Read : கெஞ்சி பட வாய்ப்பு கேட்ட வாரிசு நடிகர்.. ஒரே படத்தின் வெற்றியால் எகிறிய பிரதீப் மார்க்கெட்

ஆனால் பிரதீப் ரங்கநாதன் நன்றியை மறக்காமல் தனக்கு ஆரம்பத்தில் வாய்ப்பு கொடுப்பதாக உறுதி அளித்த ஞானவேல் ராஜாவுடன் அடுத்த படத்தில் இணைய உள்ளார். ஏற்கனவே லவ் டுடே படத்தை ஞானவேல் ராஜா தனது ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் மூலம் தயாரிப்பதாக இருந்தது.

ஆனால் அப்போது உள்ள சூழ்நிலை மற்றும் சில காரணங்களினால் லவ் டுடே படத்தை தயாரிக்க முடியாமல் போனது. அப்போதே பிரதீப்பின் அடுத்த படத்தை தான் தயாரிப்பதாக ஞானவேல் ராஜா கூறியிருந்தார். தற்போது பிரதீப்புக்கு பெரிய நிறுவனங்களிடம் இருந்து பட வாய்ப்பு வந்தாலும் தன்னை முதலில் நம்பி வந்த ஸ்டுடியோ கிரீனுக்கு அடுத்த படத்தை கொடுத்துள்ளார். கண்டிப்பாக பிரதீப் பெரிய உயரத்திற்கு செல்வார் என அந்தணன் கூறியுள்ளார்.

Also Read : காம பிசாசுகளுக்கு ரூட் போட்டுக்கொடுத்த லவ் டுடே பிரதீப்.. காட்சிகளை தூக்க வேண்டுமென வலுக்கும் எதிர்ப்பு

Trending News