செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

அஜித்தை ஒதுக்கி, சிவகார்த்திகேயனை தலையில் தூக்கி வைத்து பேசிய பிரபலம்.. பல கோடி நஷ்டத்துடன் வச்சாரு பாரு ஆப்பு

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த வருடத்தில் 2வது படமாக பிரின்ஸ் திரைப்படம் தீபாவளிக்கு முந்தைய நாள் ரிலீசானது. படத்தை பார்த்த ரசிகர்கள் கடும் விமர்சனங்களை முன் வைத்தனர். பொதுவாக சிவகார்த்திகேயன் படத்தில் காமெடியாவது நன்றாக ஒர்க் அவுட் ஆகும். ஆனால் இத்திரைப்படத்தில் அதுகூட இல்லை என்பது தான் கொடுமை .

சத்யராஜ், வெளிநாட்டு நடிகை மரியா உள்ளிட்டோர் நடித்த இத்திரைப்படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார். இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் வெளியான இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வர சினிமாஸ் மற்றும் சுரேஷ் ப்ரோடுக்ஷன்ஸ் தயாரித்தனர். இப்படத்தின் திரையரங்கு உரிமையை கோபுரம் சினிமாஸின் நிறுவனர் அன்புச்செழியன் தயாரித்தார்.

Also Read : வெற்றி, தோல்வியை தலைக்கு ஏற்றாத சிவகார்த்திகேயன்.. எதிர்பாராத கூட்டணியில் அடுத்த படம்

இதனிடையே பிரின்ஸ் படத்தின் ப்ரோமோஷனின் போது சிவகார்த்திகேயனை, வாயில் சர்க்கரை வைத்தது போல் இனிக்க இனிக்க புகழ்ந்து தள்ளினார் அன்புச்செழியன். எப்பொழுதும் மக்களுக்கு பிடித்த ஹீரோ என்றால் முதலில் எம்ஜிஆர், அடுத்ததாக விஜய், தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் பிடித்துள்ளதாகவும் அன்புச்செழியன் மேடையில் சிவகார்த்திகேயனை புகழ் மழையில் நனைய வைத்தார்.

இதில் இன்னும் முக்கியமான சம்பவம் என்னவென்றால் அஜித்தை ஒதுக்கிவிட்டு சிவகார்த்திகேயனின் தலையில் தூக்கி வைத்து ஆடினார் ஆனால் இந்த புகழ்ச்சி எல்லாம் படம் ரிலீசான உடனே அனைத்தும் மண்ணாகிப் போனது என்று தான் சொல்ல வேண்டும். படம் வெளியான முதல் நாளே திரையரங்கு ஈ ஓட்ட ஆரம்பித்து விட்டன. இதனால் அன்புச்செழியனுக்கு கிட்டத்தட்ட 14 கோடி வரை நஷ்டம் ஆகியுள்ளது.

Also Read : கையும் களவுமாக மாட்டிக் கொண்ட தளபதி விஜய்.. சிவகார்த்திகேயன் பாடலை காப்பி அடித்து சிக்கிய ‘ரஞ்சிதமே’

இந்த நஷ்டத்தை ஈடுக்கட்ட சிவகார்த்திகேயனிடம் சென்று முறையிடலாம் என அனுப்புச்செழியன் முடிவு செய்துள்ளாராம். ஏற்கனவே சிவகார்த்திகேயன் கடனில் தத்தளித்து கொண்டிருக்கிறார். இதில் இந்த ஒரு பிரச்சனையா என தலையில் அடித்து சிவகார்த்திகேயன் புலம்பி வருகிறாராம்.

எப்படியோ சிவகார்த்திகேயன் கடன் தீர்ந்தால் போதும் என கையில் கிடைக்கும் படங்களில் எல்லாம் கதையே கேட்காமல் நடித்து வருகிறார் என்ற விமர்சனமும் கோலிவுட் வடடாரத்தில் பேசப்பட்டு வருகிறது. அடுத்ததாக மாவீரன் திரைப்படத்தில் மும்முரமாக நடித்து வரும் சிவகார்த்திகேயன் அந்த படத்திலாவது வெற்றி அடைந்து தனது கடனை அடைப்பாரா என்பதை பொருந்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Also Read : தோல்வி பயத்தில் சிவகார்த்திகேயன்.. பிரின்ஸ் படத்தால் முட்டிக்கொள்ளும் மாவீரன் டீம்

Trending News