செவ்வாய்க்கிழமை, நவம்பர் 19, 2024

12 வருஷமாக போராடிய சிவகார்த்திகேயன்.. படிப்படியாக முன்னேறி வசூல் சாதனை படைத்த 5 படங்கள்

Sivakarthikeyan: சூப்பர் ஸ்டார் யார் என்று கேட்டால் சின்ன குழந்தைகள் கூட சொல்லும் என்பது போல் இப்பொழுது பெரியவர்கள் முதல் சின்ன குழந்தைகள் வரை சிவகார்த்திகேயன் பெயரை கேட்டாலே சும்மா அதிருதில்ல என்பதற்கு ஏற்ப அனைவருக்கும் பிடித்தமான ஒரு நடிகராக மாறிவிட்டார். ஆனால் இந்த இடத்திற்கு வருவதற்கு கிட்டத்தட்ட 12 வருடமாக போராடி இருக்கிறார்.

அதிலும் ஏகப்பட்ட சர்ச்சைகளிலும் பிரச்சனைகளையும் சந்தித்து அதையெல்லாம் கடந்து தற்போது அனைவரும் கொண்டாடும் விதமாக ஒரு விழிப்புணர்வு படத்தை கொடுத்து ஒட்டுமொத்த தமிழக மக்களின் மனதிலும் இடம் பிடித்திருக்கிறார். அப்படி கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வந்த சிவகார்த்திகேயனின் வசூல் சாதனைகளை பற்றி ஒரு தொகுப்பாக பார்க்கலாம்.

சிவகார்த்திகேயன் நடித்த முதல் படம் தான் மெரினா. இதில் பெரிய அளவுக்கு வசூல் சாதனை இல்லை என்றாலும் இவருடைய நடிப்பை பாராட்டும் அளவிற்கு மக்கள் மனதில் ஒரு இடத்தை பிடித்து விட்டார். அடுத்த வருடமே எதிர்நீச்சல் படத்தின் மூலம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தன்னம்பிக்கை இருந்தால் போதும் வெற்றி நிச்சயம் என்பதற்கு ஏற்ப நடித்து இவருடைய கேரியருக்கு திருப்புமுனையை ஏற்படுத்திக் கொண்டார்.

இதனை தொடர்ந்து வருத்தப்படாத வாலிபம் சங்கம் படத்தில் நடித்து அனைவரையும் குஷிப்படுத்தி விட்டார். அடுத்ததாக மான்கராத்தே படத்தில் மாஸ் ஹீரோவாக என்டரி கொடுத்து இவருக்கு என்று ரசிகர்களை சம்பாதித்து விட்டார். அத்துடன் இப்படத்தின் மூலம் 50 கோடி வரை வசூலில் சாதனை புரிந்தார். அடுத்ததாக காக்கி சட்டை, ரஜினி முருகன் போன்ற படங்களை தொடர்ந்து ரெமோ படத்திலும் வித்தியாசமான கேரக்டரில் நடித்தார்.

அப்படி நடித்த ரெமோ படம் சிவகார்த்திகேயனுக்கு 75 கோடி லாபத்தை கொடுத்தது. அடுத்ததாக வேலைக்காரன், சீம ராஜா, கனா போன்ற படங்களில் நடித்துவிட்டு நெல்சன் இயக்கத்தில் டாக்டர் படத்தில் நடித்தார். இந்த படம் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவே செய்யாது என்பதற்கேற்ப திரும்பத் திரும்ப பார்க்கத் தூண்டும் வகையில் அமைந்தது. அதனாலேயே 100 கோடி லாபத்தை சம்பாதித்து கொடுத்தது.

அடுத்ததாக டான் படத்தின் மூலம் 125 கோடி வசூல் சாதனையை படைத்தார். இதனைத் தொடர்ந்து மாவீரன் மற்றும் அயலான் படங்களில் நடித்தார். இதையெல்லாம் தாண்டி தீபாவளிக்கு வெளிவந்த அமரன் படத்தின் மூலம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு 300 கோடி லாபத்தை சம்பாதித்து தற்போது வரை அனைத்து திரையரங்குகளிலும் அமரன் படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

இன்னும் சொல்லப் போனால் சில பள்ளிகளில் மாணவர்கள் இந்த படத்தை பார்த்தாக வேண்டும் என்று தியேட்டர்களில் கூட்டிட்டு போய் காட்டும் அளவிற்கு ஒரு நல்ல விஷயத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இப்ப இருக்க காலகட்டத்தில் வருகிற படங்களை பார்க்கும் பொழுது எரிச்சலாகவும் தியேட்டரில் போய் பார்க்க முடியாத அளவிற்கு தான் இருக்கிறது.

ஆனால் சிவகார்த்திகேயன் படத்தை நம்பி குடும்பத்துடன் போய் பார்க்கலாம். குழந்தைகள் அந்த அளவிற்கு என்ஜாய் பண்ணி வருவார்கள். இப்படி நல்ல படங்களில் மூலம் அடுத்தடுத்த வாய்ப்புகளை பெற்று அசைக்க முடியாத ஒரு ஹீரோவாக வர வேண்டும்.

- Advertisement -spot_img

Trending News