Sivakarthikeyan: வெற்றியை நோக்கி பயணிக்கும் போது எத்தனை தடங்கள் வந்தாலும் அதை தகர்த்து எறிந்து ஜெயித்தே ஆக வேண்டும் என்று முழு முயற்சியுடன் போராடி வருகிறார் சிவகார்த்திகேயன். கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் வெற்றிகரமாக மாற்றி அமைத்து தற்போது தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வந்து விட்டார்.
அந்த வகையில் கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் ராணுவ வீரராக மறைந்த முகுந்த் வரதராஜன் பயோபிக் கதையை எடுத்து நடித்து வருகிறார். இப்படத்தில் இவருடைய பேச்சும் நடவடிக்கையும் பார்க்கும் பொழுது கண்டிப்பாக இந்த படம் இவரை அடுத்த லெவலுக்கு கொண்டு போய் சேர்த்து விடும்.
இதனைத் தொடர்ந்து ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் கமிட்டாக போகிறார். விஜய் எப்படி எந்த நேரத்தில் யாருடன் கூட்டணி வைத்தால் நமக்கு வெற்றி கிடைக்கும் என்ற ஒரு ஃபார்முலாவை வைத்து ஆட்டநாயகனாக ஜெயித்தார். அதே மாதிரி சிவகார்த்திகேயனும் கொஞ்சம் கொஞ்சமாக அதே பார்முலாவை பயன்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் ஏஆர் முருகதாஸ் கூட்டணியில் சிவகார்த்திகேயனுக்கு ஒரு திருப்புமுனை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதனை அடுத்து பேஷன் ஸ்டுடியோ தயாரிப்பில் ஒரு படத்தை பண்ணுவதற்கு வாக்கு கொடுத்து இருக்கிறார்.
முடிவு பண்ணிய எஸ் கே
இந்த நேரத்தில் இவருடைய நண்பரும் மற்றும் டான் படத்தை எடுத்த இயக்குனருமான சிபி சக்கரவர்த்தியுடன் மறுபடியும் கூட்டணி வைக்கப் போகிறார். இவர்களுடைய கூட்டணியில் அமைந்த டான் படம் பிளாக் பாஸ்டர் ஹிட் அடித்தது.
அதனால் இந்த கூட்டணியில் உருவாக்க போகும் படம் நிச்சயம் வெற்றியாக தான் அமையும். இப்படி அமரன் படத்தை தொடர்ந்து அடுத்து இரண்டு படங்களுமே தமிழ் இயக்குனர்களிடம் தான் கமிட் ஆகியிருக்கிறார். இதற்கு இடையில் தெலுங்கு படத்தில் நடிக்கப் போவதாகவும் அங்குள்ள இயக்குனர்களுடன் சேர போவதாகவும் பல பேச்சுக்கள் அடிபட்டது.
ஆனால் அதையெல்லாம் வெறும் வதந்தி மட்டும்தான். இப்போதைக்கு நான் தமிழ் இயக்குனர்களுடன் மட்டும் தான் கூட்டணி வைத்து நடிக்கப் போகிறேன் என்று திட்டவட்டமாக முடிவு பண்ணி ஒரு கோட்டுக்குள் வந்து விட்டார். அதுமட்டுமில்லாமல் என்னை வளர்த்து விட்டு இந்த நிலைமைக்கு ஆளாக்கியது இங்குள்ள இயக்குனர்கள் தான்.
அதனால் என்னைக்குமே இவர்களை விட்டுவிட்டு நான் காசுக்காக அந்த பக்கம் சாய மாட்டேன் என்று சத்தியம் பண்ணாத குறையாக முடிவெடுத்து விட்டார். இதனால் இவரை வைத்து படத்தை எடுத்தால் லாபம் கிடைத்துவிடும் என்று தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் வரிசை கட்டி எஸ்கேயின் கால் சீட்டுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.