வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கொஞ்சமும் எதிர்பார்க்காமல் தோற்றுப் போன ரஜினி.. மூட பழக்கத்தை தூக்கி எறிந்த சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு அதிகமாக இருக்கிறது.

இப்படத்தை அடுத்து அவர் இப்போது மாவீரன் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மடோன் அஸ்வின் இயக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடிக்கிறார். ஏற்கனவே சிவகார்த்திகேயன் ரஜினியின் வேலைக்காரன் திரைப்பட டைட்டிலில் நடித்திருந்தார்.

Also read : கிரிக்கெட் வீரரின் பயோபிக்கில் நடிக்கும் சிவகார்த்திகேயன்.. டாப் கியரில் எகிரும் மார்க்கெட்

அதைத்தொடர்ந்து தற்போது மேண்டும் ரஜினியின் படமான மாவீரன் பட தலைப்பையும் கைப்பற்றி இருக்கிறார். இப்படி ஒரு பேச்சு நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் பலரும் சிவகார்த்திகேயனிடம் இந்த பட தலைப்பு வேண்டாம், வேறு மாற்றி விடுங்கள் என்று கூறியிருக்கிறார்கள்.

ஏனென்றால் ரஜினியின் நடிப்பில் வெளிவந்த மாவீரன் திரைப்படம் படுதோல்வி அடைந்தது. அதனால் பலரும் தோல்வி பட டைட்டிலை எதற்காக தேர்ந்தெடுப்பீர்கள் என்றும் இது ராசி கிடையாது என்றும் கூறியிருக்கின்றனர். அதனால் சிவகார்த்திகேயனுக்கு கூட லைட்டாக பயம் எட்டிப் பார்த்திருக்கிறது.

Also read : கழுத்தை நெரித்த கடன், காப்பாற்றி விட்ட தயாரிப்பாளர்.. நன்றி கடனுக்காக சம்மதித்த சிவகார்த்திகேயன்

ஆனால் இயக்குனர் தான் அதைப் பற்றி எல்லாம் கண்டுகொள்ள வேண்டாம். இந்த டைட்டில் தான் இதற்கு ரொம்ப பொருத்தமாக இருக்கும் என்று கூறி இருக்கிறார். அதன் பிறகு தான் சிவகார்த்திகேயன் ஓரளவு சமாதானம் அடைந்து இந்த டைட்டிலை வைக்க சம்மதித்திருக்கிறார்.

அதன் பிறகு பட டைட்டில் அறிவிப்பு வீடியோவாக வந்த பொழுது ரஜினியின் பழைய மாவீரன் கெட்டப்பில் சிவகார்த்திகேயன் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் முற்றிலும் வேறுபட்ட தோற்றத்தில் வர இருக்கிறாராம். அது நிச்சயம் ரசிகர்களை கவரும் வகையில் இருக்கும் என்று கூறுகின்றனர்.

Also read : விஜய்க்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா.? சிவகார்த்திகேயன் நீங்க இன்னும் வளரணும் தம்பி!

Trending News