புதன்கிழமை, ஜனவரி 15, 2025

அண்ணானு மட்டும் சொல்லாத.. மனைவிக்கு முன்னாள் ரொமான்ஸ் செய்த சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள அமரன் திரைப்படம் அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி வெளியீடாக உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. ஆக்‌ஷன் போரை மையமாக கொண்ட படமாக உருவாகி வரும் இப்படத்தை உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கிறார். அமரன் இசை வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது.

இந்த ஆடியோ விழாவில் சூப்பர்ஸ்டார், தளபதி போல பல விஷயங்களை சுவாரசியமாக பேசினார். அது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக சிவகார்த்திகேயன் பேசிய அனைத்துமே கன்டென்ட் ஆக மாறியுள்ளது. இந்த நிலையில், லவ் சீன் ஒன்றை recreate செய்தார்கள். அனைவரும் அதை ரசிக்க, சிவகார்த்திகேயன் மனைவி, ஆர்த்தி முகத்தில் மட்டும் எள்ளும் கொள்ளும் வெடித்தது. ஆனால் அதை வெளிகாட்டிக்கொள்ளாமல், சிரித்தே சமாளித்தார். உண்மையில் திரை துறையில் இருப்பவர்களின் கணவன் அல்லது மனைவியாக இருப்பதே ஒரு பெரிய டாஸ்க் தான் போல.

அண்ணானு மட்டும் கூப்பிடாத மா..

மேலும் இந்த ஆடியோ லாஞ்சில், சாய் பல்லவியுடன் ஏற்பட்ட ஒரு சுவாரசிய அனுபவத்தை பற்றி சிவகார்த்திகேயன் பகிர்ந்துள்ளார். அது மேடையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. அதில், அவர் கூறியது, “தென்னிந்திய திரையுலகில் சாய் பல்லவியின் பெயர் ஒரு பிராண்டாக மாறிவிட்டது. மலர் டீச்சர் வேடத்தில் நடித்தபோது எல்லோரையும் போல நானும் சாய் பல்லவியின் ரசிகனாகிவிட்டேன்.”

“சாய் பல்லவிக்கு போன் செய்து நடிப்பு நன்றாக இருப்பதாக கூறினேன். Anna Thank you so much anna.. என்றார். அந்த பதிலைக் கேட்டு அதிர்ந்து போனேன். அப்ப நான் அம்மா ஸ்டாப்.. நாள் சாய் பல்லவிட்ட இல்ல.. மலர் டீச்சர்ட பேசுறதாவே நினைச்சு பேசிட்டு இருக்கேன்.”

” நீ மலர் டீச்சராவே பேசிரு.. அதுல வந்த மாதிரி மறந்து கூட போயிடு.. ஆனா அண்ணான்னு மட்டும் செல்லாதன்னேன்.. என்னைக்காவது ஒரு நாள் நாம இரண்டு பேரும் சேர்ந்து நடிக்குற சூழல் கூட வரலாம்ன்னு சொன்னேன் நான். அது இப்ப வந்துருக்கு. சாய் பல்லவியுடன் கண்டிப்பாக படம் பண்ண வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அமரன் மூலம் அது உண்மையாகிவிட்டது” என்று கூறியுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள், “பாத்தீங்களா.. மனைவி முன்னாடியே எவ்வளவு தவுளத்தா இத சொல்றாருன்னு.. வீட்டுல இன்னிக்கு சிறப்பு பூசை இருக்கு..” என்று நக்கல் செய்து வருகின்றனர்.

Trending News