Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே தனது உறவுக்கார பெண்ணான ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அவருக்கு ஆராதனா மற்றும் குகன் என்ற இரண்டு குழந்தைகள் இருந்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆர்த்தி மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் ஒரு பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டனர். அப்போது ஆர்த்தி நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்திருந்தனர்.
சிவகார்த்திகேயனின் 2வது மகன் பெயர் சூட்டும் விழா
அதன்படி கடந்த மாதம் இந்த தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இன்று அந்த குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா பிரம்மாண்டமாக நடந்துள்ளது. அந்த புகைப்படங்கள் தான் இணையத்தில் வெளியாகி சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் தனது இரண்டாவது மகனுக்கு பவன் என்ற பெயரை சிவகார்த்திகேயன் சூடியிருக்கிறார். பிரமாண்டமாக நடந்துள்ள இந்த விழாவில் குடும்பத்துடன் சிவகார்த்திகேயன் மகிழ்ச்சியுடன் இருக்கும் புகைப்படங்கள் பார்க்க அழகாக இருக்கிறது.
சிவகார்த்திகேயனின் 2வது மகன் பெயர் பவன்
இதேபோல் எப்போதும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக சிவகார்த்திகேயன் இருக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சினிமாவை பொருத்தவரையில் சிவகார்த்திகேயன் கடைசியாக நடித்த அயலான் படம் பெரிய அளவில் போகவில்லை.
குகன் சிவகார்த்திகேயன்
ஆனாலும் அடுத்ததாக அவர் நடித்து வரும் அமரன் படம் கண்டிப்பாக மாபெரும் வெற்றியைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அமரன் படத்தை பற்றிய அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கலாம்.
ஆராதனா சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் அடுத்த பட அப்டேட்
- டான் கூட்டணியில் மீண்டும் நடிக்கும் சிவகார்த்திகேயன்
- சிவகார்த்திகேயன் நெகட்டிவ் இமேஜை போக்க வந்த கடவுள்
- சித்தார்த்தால் நொந்து போன சிவகார்த்திகேயன்