புதன்கிழமை, ஜனவரி 15, 2025

நிரம்பி வழியும் கமலின் கஜானா.. அமரன் இரண்டாவது நாள் வசூல்

Amaran Collection: ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் வெளியாகி இருக்கிறது அமரன் படம். மேஜர் முகுந்த் வரதராஜின் வாழ்க்கை வரலாறு மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது.

அமரன் படம் மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான நிலையில் நினைத்தது போல வசூலை வாரி குவித்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஆகியோர் தியேட்டருக்கு சென்று நேரில் படத்தை பார்த்து விட்டு கமலுக்கு போன் செய்து வாழ்த்துகின்றனர்.

சிவகார்த்திகேயனின் கேரியரில் மிக முக்கியமான படமாக அமரன் படம் அமைந்துள்ளது. அதேபோல் சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக சாய்பல்லவி இந்த படத்தில் பட்டையை கிளப்பி இருக்கிறார். கமல் தனது ராஜ்கமல் நிறுவனத்தின் மூலம் அமரன் படத்தை தயாரித்திருந்தார்.

அமரன் இரண்டாவது நாள் கலெக்ஷன்

இந்நிலையில் படத்தின் முதல் நாள் வசூலை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அதாவது தெலுங்கு மற்றும் கேரளா இடங்களில் சிவகார்த்திகேயனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதன்படி உலகம் முழுவதும் முதல் நாளில் அமரன் படம் 42.3 கோடி வசூல் செய்திருக்கிறது.

இதை அமரன் பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இரண்டாம் நாளான நேற்று வெள்ளிக்கிழமை மட்டும் கிட்டத்தட்ட 20 கோடி வசூலை செய்திருக்கிறது. மேலும் இன்று மற்றும் நாளை சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் படத்தின் வசூல் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

எதிர்பார்த்ததை விட அமரன் படம் அதிக வசூலை செய்து வருவதால் படக்குழு மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளது. மேலும் தியேட்டரில் எல்லாமே ஹவுஸ் ஃபுல்லாக இருந்து வருகிறது. ப்ரீ புக்கிங்கில் நல்ல கலெக்ஷனை அமரன் படம் அள்ளி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News