புதன்கிழமை, ஜனவரி 15, 2025

SJ சூர்யா வளர்ச்சி பிடிக்காத சிவகார்த்திகேயன்.. ஒரு பெரிய மனுஷன இப்படியா அசிங்கப்படுத்துவது

தற்போது தமிழ் சினிமாவில் படு பிசியாக வலம் வந்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனின் நடிப்பில் அடுத்ததாக டான் படம் வெளியாக இருக்கிறது. தற்போது இந்த படத்தை புரமோஷன் செய்யும் வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக இருந்து வருகிறது.

எஸ் ஜே சூர்யா, பிரியங்கா அருள்மோகன், சிவாங்கி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் எப்போதோ ரிலீசுக்கு தயாராகி விட்டது. ஆனால் பீஸ்ட் படம் ரிலீஸ் ஆனதால் இந்த படத்தின் ரிலிஸ் மற்றும் பிரமோஷன் வேலைகளை கொஞ்சம் தள்ளிப் போட்டு இருந்தனர்.

தற்போது இப்படம் மே 13 அன்று வெளியாக இருக்கிறது. அதனால் படத்தை விளம்பரம் செய்யும் பொருட்டு படக்குழுவினர் படம் தொடர்பான பேனர்களை எல்லா இடத்திலயும் வைத்து வருகின்றனர். அதிலும் சிவகார்த்திகேயனின் போட்டோவை போட்டு பெரிய பெரிய பேனர்கள் எல்லாம் தயார் ஆகிக்கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் சத்யம் தியேட்டரில் டான் திரைப்படம் குறித்த ஒரு மிகப் பெரிய பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதைப்பார்த்த சிவகார்த்திகேயன் தற்போது படக்குழுவினர் மீது கடும் கோபத்தில் இருக்கிறார். அதாவது அந்த பேனரில் எஸ் ஜே சூர்யாவின் போட்டோவை பெரிதாகப் போட்டு விட்டு சிவகார்த்திகேயன் அவருக்குப் பின்னால் நிற்பது போன்று சிறிய போட்டோ போடப்பட்டு இருக்கிறதாம்.

இதனால் கடுப்பான சிவகார்த்திகேயன் அந்த போட்டோவை மாற்றும்படி படக்குழுவினருக்கு ஆர்டர் போட்டிருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன் எஸ் ஜே சூர்யா சிவகார்த்திகேயனை விஜய்க்கு அடுத்தபடியாக வைத்து பேசி இருந்தார். தான் ஒரு பெரிய இயக்குனர் என்ற எந்த ஈகோவும் இல்லாமல் அவர் சிவகார்த்திகேயனை குடும்பங்கள் போற்றும் ஹீரோ என்றெல்லாம் புகழ்ந்து கூறியிருந்தார்.

ஆனால் சிவகார்த்திகேயன் அதைப் பற்றி கொஞ்சமும் யோசிக்காமல் இப்படி ஒரு வேலையை பார்த்து இருக்கிறார். கொஞ்சம் பேரும், புகழும் வந்ததும் பலரைப் போல் சிவகார்த்திகேயனும் மாறிவிட்டதாக திரையுலகில் தற்போது பேசப்பட்டு வருகிறது.

Trending News