வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

டான் படத்தில் சிவகார்த்திகேயன் கேரக்டர் இதுதான்.. பேட்டியில் உளறிக் கொட்டிய பிரபலம்

சிவகார்த்திகேயன் தற்போது எஸ்கே 20 திரைப்படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து அவர் பிரபல தயாரிப்பாளர்களின் திரைப்படங்களில் நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அவர் நடித்து முடித்துள்ள டான் திரைப்படம் இன்னும் சில நாட்களில் வெளியாக இருக்கிறது. அதனால் படக்குழு தற்போது படத்தை புரமோஷன் செய்யும் பணிகளில் மும்முரமாக இருந்து வருகிறது. சிவகார்த்திகேயனுடன் இணைந்து பிரியங்கா அருள் மோகன், எஸ் ஜே சூர்யா, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.

கல்லூரி வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மிகவும் இளமையான தோற்றத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி வந்தது. தற்போது அதை உறுதி செய்யும் பொருட்டு ஒரு விஷயத்தை படத்தின் ஹீரோயின் பிரியங்கா அருள்மோகன் தெரிவித்துள்ளார்.

அதாவது இந்த படத்தில் சிவகார்த்திகேயன் 17 வயது பையன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று அவர் கூறியிருக்கிறார். இதற்காக அவர் உடல் எடையை குறைத்து, மிகவும் சிறப்பாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி உள்ளதாகவும் அவர் பாராட்டி இருக்கிறார்.

மேலும் இந்தப் படம் இளைஞர்களை கவரும் வகையில் இருக்கும் என்றும், நம் கல்லூரி கால வாழ்க்கையை நினைவு படுத்தும் வகையில் கலகலப்பாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். படத்தில் சிவகார்த்திகேயன் பற்றி எந்த அப்டேட்டையும் இதுவரை வெளியிடாமல் படக்குழு மிகவும் சஸ்பென்ஸாக வைத்திருந்து.

ஆனால் அதைப் பற்றி தற்போது பேட்டியில் உளறிக் கொட்டிய பிரியங்கா அருள்மோகன் மேல் படக்குழு சற்று மன வருத்தத்தில் இருக்கின்றனர். எப்படி இருந்தாலும் இதுவும் படத்திற்கான ஒரு பிரமோஷன் தான். அதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News