வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

அரசியலுக்குள் நுழைய ஆசைப்படும் சிவகார்த்திகேயன்.. டான் படத்தால் வந்த சர்ச்சை

சிவகார்த்திகேயன் மற்றும் லைகா புரொடக்சன்ஸ் இணைந்து தயாரித்துள்ள டான் திரைப்படத்தின் டிரைலர் தற்போது மிகவும் பிரம்மாண்டமாக வெளியாகியிருக்கிறது. அறிமுக இயக்குனர் சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன், எஸ் ஜே சூர்யா, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்த திரைப்படம் உருவாகி இருக்கிறது.

விரைவில் வெளியாக இருக்கும் இந்த படத்தின் டிரைலர் தற்போது சோசியல் மீடியாவை கலக்கி வருகிறது. கல்லூரி சம்பந்தப்பட்ட கதையாக உருவாகியிருக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் பள்ளி மாணவன், கல்லூரி டான் என்ற இரு தோற்றங்களில் அசத்தலாக இருக்கிறார்.

மேலும் இன்றைய கல்லூரி மாணவர்களுக்கிடையே இருக்கும் துருதுருப்பு, கலகலப்பு என்று அனைத்தையும் அவர் தன் நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார். டாக்டர் படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் பிரியங்கா அருள் மோகன், சிவாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

கல்லூரி பிரின்சிபலாக வரும் எஸ் ஜே சூர்யா மாநாடு திரைப்படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் தன்னுடைய வில்லத்தனத்தால் மிரட்டியிருக்கிறார். வழக்கம்போல அவருடைய அலட்டல் இல்லாத நடிப்பு இந்தப் படத்திலும் ரசிகர்களை நிச்சயம் கவரும்.

ட்ரைலரை பார்க்கும் போதே லாஸ்ட் பென்ச் மாணவனின் வாழ்க்கையில் நடக்கும் கதை தான் இப்படம் என்று தெரிகிறது. பொறுப்பில்லாத பிள்ளையை கண்டிக்கும் அப்பாவாக சமுத்திரக்கனி, சிவாங்கி, பிக்பாஸ் ராஜு என்று இன்னும் பல கேரக்டர்கள் இப்படத்தில் இருப்பதால் கலகலப்பிற்கு பஞ்சம் இருக்காது என்றே தெரிகிறது.

தன் வாழ்க்கையில் என்னவாக மாறவேண்டும் என்று சிவகார்த்திகேயன் சொல்லும்போது இறுதியாக அரசியல்வாதி ஆகிவிடவா என்று கேட்பதை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு ஏன் இந்த வேலை என்று கலாய்த்து வருகின்றனர். அதிலும் அரசியல்வாதியானால் நிறைய பொய் சொல்ல வேண்டும் என்று இடம்பெற்றுள்ள அந்த வசனம் நிச்சயம் ஒரு பஞ்சாயத்தை உருவாக்கும் என்று தெரிகிறது.

Trending News