வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

சிவகார்த்திகேயன் காலை வாரிய சின்ன தம்பி.. நான் இருக்கேன் என்று கைகொடுக்கும் பெரிய தம்பி

தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் சிவகார்த்திகேயன் நடிப்பை பார்த்து ரசிகர்கள் என்ஜாய் பண்ணி வருகிறார்கள். இவரது படங்கள் குடும்பத்துடன் பார்த்து ரசித்து மகிழும் படியாக தான் இருக்கும். அத்துடன் குழந்தைகளிடம் ஈசியாக ரீச் ஆகிறார். இவருடைய வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம்.

இப்படி தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து முன்னணி ஹீரோவாக வலம் வந்த இவருக்கு கடைசியாக வெளிவந்த பிரின்ஸ் படம் நன்றாக ஓடவில்லை. அதனால் கொஞ்சம் கடன் ஏற்பட்டு விட்டது. இதனை உடனே சரி செய்ய விட்டால் நம்மளால் எழுந்திருக்க முடியாது என்று விழுந்த வேகத்திலேயே எழுந்து வருகிறார்.

Also read: தயாரிப்பாளர் தலையில் துண்டை போட வைத்த சிவகார்த்திகேயன்.. சீமராஜா படத்திற்கு வாங்கிய சம்பளம்

தற்போது இவர் நடிப்பில் வெளிவர இருக்கும் மாவீரன் திரைப்படம் எப்பொழுது வெளியிடுவார்கள் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். இதனை அடுத்து இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். அதே மாதிரி இந்த படத்தில் அனிருத் இசையமைத்தால் அந்த படம் சக்சஸ் ஆகும் என்று ஒரு சென்டிமென்ட் ஆக அனிருத்திடம் கேட்டிருக்கிறார்.

ஆனால் அனிருத் கொஞ்சம் கூட யோசிக்காமல் இதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார். இவ்வளவுக்கும் சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத் நெருங்கிய நண்பர்களாகவும், அண்ணன் தம்பியும் போல தான் உறவாடிக் கொண்டிருந்தார்கள். இப்படி இருக்கையில் சென்டிமென்டாக கூப்பிட்டும் வராமல் சிவகார்த்திகேயன் காலை வாரிவிட்டார்.

Also read: சிவகார்த்திகேயனை பழி தீர்க்க களமிறங்கும் தனுஷ்.. இந்த வாட்டி சும்மா விடுறதா இல்ல

அதன் பின் ஜிவி பிரகாஷிடம் சென்று இசையமைக்க ஒப்பந்தம் பெற்று இருக்கிறார்கள். ஆனால் ஜிவி பிரகாஷ் தற்போது பெரிய பெரிய பட்ஜெட் படங்களில் ஹீரோவாக நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கிறார். இப்படி பிசியான நேரத்திலும் அண்ணன் சிவகார்த்திகேயனுக்காக இசையமைக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

இதை பார்க்கும் பொழுது சிவகார்த்திகேயனை சின்னத்தம்பி அனிருத் கைவிட்டாலும், நான் இருக்கேன் என்று பெரிய தம்பி கை கொடுத்திருக்கிறார். ஆக மொத்தத்தில் சிவகார்த்திகேயன் படத்திற்கு ஜிவி பிரகாஷ் தான் இசையமைக்க போகிறார் என்று முடிவாகிவிட்டது.

Also read: வித்தியாசமான கேரக்டரில் சிவகார்த்திகேயன் நடித்த 5 படங்கள்.. சுத்தமாக செட்டாகாத போலீஸ் கதாபாத்திரம்

Trending News