திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சிவகார்த்திகேயன் பட வாய்ப்பை தட்டி தூக்கிய விடுதலை சூரி.. அடுத்த படம் இயக்குனர் யார் தெரியுமா?

சினிமாவில் கிடைத்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டு பல நட்சத்திரங்கள் முன்னுக்கு வந்திருக்கிறார்கள். அந்த வரிசையில் காமெடி நடிகராக வந்த சூரி தற்போது ஹீரோவாக ஜொலித்து வருகிறார். இதுவரை காமெடியனாக பார்த்து வந்த இவரை விடுதலை படத்தில் சீரியஸ் கேரக்டரில் பார்த்த மக்கள் இவருக்கு கச்சிதமாக பொருந்துகிறது என்று சொல்லும் அளவிற்கு தனது நடிப்பை கதைக்கு ஏற்ற மாதிரி நடித்து நல்ல வரவேற்புகளை பெற்றிருக்கிறார்.

இதைத் தொடர்ந்து தற்போது அனைவரின் கவனமும் இவர் பக்கம் திரும்பி விட்டது. அதனால் இவரை சரியாக பயன்படுத்திக் கொண்டால் வெற்றி பெறலாம் என்று பல இயக்குனர்கள் இவரை நாடிப் போகிறார்கள். இது இயக்குனருக்கு மட்டும் நல்ல வாய்ப்பு அல்ல சூரிக்கும் அடித்த ஜாக்பாட். அதனால் சூரியும் தற்போது வரும் வாய்ப்புகளை ஒன்று விடாமல் ஹீரோவாக நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்து வருகிறார்.

Also read: சூரிக்கு போட்டியாக களமிறங்கவுள்ள அடுத்த நடிகர்.. ஹீரோவாக அவதாரம் எடுக்க தயாரான காமெடி நடிகர்

இதற்கு அடுத்து இயக்குனர் துரை செந்தில்குமார் சூரியிடம் ஒரு கதையை சொல்லி முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு சம்மதத்தையும் வாங்கிக் கொண்டார். இந்த இயக்குனர் ஏற்கனவே சிவகார்த்திகேயனுக்கு எதிர்நீச்சல், காக்கி சட்டை மற்றும் தனுஷ் நடிப்பில் வந்த கொடி, பட்டாஸ் போன்ற படங்களை இயக்கி வெற்றி அடைந்திருக்கிறார். அதனால் சிவகார்த்திகேயன் வைத்து மறுபடியும் ஒரு படம் எடுக்கலாம் என்று நினைத்திருந்திருக்கிறார்.

அதற்காக அவரிடமும் கதையே சொல்லி இருக்கிறார். ஆனால் தற்போது எல்லா பக்கமும் அதிக அளவில் பேசப்படுவது சூரியின் நடிப்பு என்பதால் உடனே இயக்குனர் இந்த கதைக்கு ஏற்ற ஆளு சூரி தான் என்று முடிவு பண்ணி சிவகார்த்திகேயனுக்கு கொடுக்க இருந்த வாய்ப்பை சூரிக்கு மாற்றிவிட்டார். இதற்கிடையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த பிரின்ஸ் திரைப்படம் படுமோசமான தோல்வியை சந்தித்தது.

Also read: வளர்த்த இயக்குனரை மிதித்த சிவகார்த்திகேயன்.. வேறு வழியின்றி விஷால் இடம் அடைக்கலம்.!

எப்படியாவது சரி செய்ய வேண்டும் என்று இவரின் அடுத்த படமான அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தரமான படமாக கொடுக்க வேண்டும் என்று மும்மரமாக செயல்பட்டு வருகிறார். அடுத்தபடியாக துரை செந்தில்குமார் இவரிடம் கதை சொன்ன போது சரி இந்த படமும் கண்டிப்பாக வெற்றி அடையும் என்று ஒரு ஆசையில் இருந்திருக்கிறார். ஆனால் திடீரென்று இயக்குனர் இப்படி முடிவு எடுத்தது அவருக்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தாலும் சூரி அவருடைய நண்பர் என்பதால் அதிகளவில் பொருட்படுத்தவில்லை.

மேலும் விடுதலை பார்ட் 2 வேலைகள் முடிந்த பிறகு கூடிய விரைவில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி நடிக்க இருக்கிறார். அடுத்ததாக இப்படத்திற்கு வெற்றிமாறன் தான் கதை எழுதுகிறார். இப்படம் சூரிக்கு வேறொரு கோணத்தில் வெற்றி கொடுக்கும் என்பது நிச்சயம்.

Also read: 11 நாட்களில் விடுதலை படத்தின் மொத்த வசூல்.. பாக்ஸ் ஆபிஸில் செய்த சாதனை

Trending News