ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

இதுவரை தேசிய விருதுகளை தட்டித் தூக்கிய 6 நடிகர்கள்.. எம்ஜிஆர் மிஞ்சிய நடிப்பு அசுரன்

ஒவ்வொரு ஆண்டும் வெளிவந்த படங்களின் மூலம் சிறந்த நடிகரை தேர்வு செய்து அவர்களை கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு கொடுக்கும் விருதுதான் தேசிய விருது. அப்படிப்பட்ட உயரிய விருதை தட்டி சென்ற ஆறு நடிகர்களை பற்றி பார்க்கலாம்.

எம்ஜிஆர்:  1971 ஆம் ஆண்டு எம் கிருஷ்ணன் இயக்கத்தில் ரிக்ஷாக்காரன் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் எம்ஜிஆர், பத்மினி மற்றும் மஞ்சுளா ஆகியோர் நடித்தார்கள். இத்திரைப்படம் ஒரு ரிக்ஷாகாரனை மையமாக வைத்து அதன் பின்னணியில் இருக்கும் மர்மத்தை வெளிகொண்டு வரும் வகையில் அமைந்திருக்கும். இப்படம் 100 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடி வணிக ரீதியாக வெற்றி பெற்றது. மேலும் எம்ஜிஆர் இப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார். இந்தியாவிலேயே முதன்முதலாக சிறந்த நடிகருக்கான தேசிய விருது தட்டி சென்ற பெருமை இவரை சேரும்.

கமல்: சிறந்த நடிகருக்கான மூன்று தேசிய விருதை தன் நடிப்பின் மூலம் தூக்கிச் சென்ற அதிசயம் உலக நாயகன் கமலஹாசன் மட்டுமே. ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து அதற்கேற்றவாறு நடித்துக் கொடுப்பதில் சகலகலா வல்லவன் என்றே சொல்லலாம். அப்படி இவர் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்ற படம் மூன்றாம் பிறை, நாயகன் மற்றும் இந்தியன். இந்தப் படங்கள் எப்பொழுதுமே மறக்க முடியாத காவியமாக இருக்கிறது.

Also read: கமல் நிலைமை தான் விக்ரமுக்கும்.. ரிலீசுக்கு முன்பே அந்த படத்திற்கு வந்த மோசமான விமர்சனங்கள்

விக்ரம்: பாலா இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு பிதாமகன் திரைப்படம் வெளிவந்தது. இதில் விக்ரம், சூர்யா, லைலா, சங்கீதா ஆகியோர் நடித்திருந்தார்கள். இப்படத்தில் விக்ரம் வெட்டியான் என்ற கதாபாத்திரத்தில் அமைதியாக இருந்து திறமையாக நடிப்பை வெளிக்காட்டி இருப்பார். இப்படத்தில் இவர் நடிப்பிற்காக சிறந்த நடிகர் என்ற தேசிய விருதை ஏபிஜே அப்துல் கலாம் அவர்களிடமிருந்து பெற்றிருப்பார்.

தனுஷ்: இவர் இரண்டு தேசிய விருதுகளை பெற்றிருக்கிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு ஆடுகளம் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் சேவல் சண்டை ஜாக்கியாக இவரது கதாபாத்திரத்தை அழகாக நடித்திருப்பார். இதற்காக இவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. மற்றும் 2019 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்திற்காக இவருக்கு சிறந்த நடிகர் என்ற தேசிய விருது கிடைத்தது.

Also read: ரஜினிக்கு சவால் விடும் அளவிற்கு வீடு கட்டிய தனுஷ்.. மொத்த மதிப்பை கேட்டு வாயை பிளக்கும் திரையுலகம்

சூர்யா: சுதா கொங்கரா இயக்கத்தில் 2020 ஆம் ஆண்டு சூரரைப் போற்று திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு மற்றும் ஊர்வசி ஆகியோர் நடித்தார்கள். இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றது. இப்படத்திற்காக சூர்யாவிற்கு சிறந்த நடிகர் என்ற தேசிய விருது கிடைத்தது.

விஜய் சேதுபதி: தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் விஜய் சேதுபதி,ஃபஹத் பாசில், சமந்தா மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்தார்கள். இப்படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்திருக்கிறார். இதற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது விஜய் சேதுபதி பெற்றிருப்பார்.

Also read: விஜய் சேதுபதியுடன் இணையும் கௌதம் மேனன்.. இந்த படமாவது முடிச்சு வெளி வருமா.?

Trending News